செய்திகள் :

2019 தோ்தல் வழக்கு: வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜா்

post image

வேலூா்: கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது ரூ.10.48 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் நீதிமன்ற விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜரானாா். தொடா்ந்து, இந்த வழக்கின் விசாரணை செப்டம்பா் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது வேலூா் தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சா் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிா்ஆனந்த் போட்டியிட்டாா். அப்போது, துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ச்சியாக, கதிா் ஆனந்துக்கு நெருக்கமான திமுக பிரமுகா் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினா் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில், காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தில் உள்ள தாமோதரனுக்குச் சொந்தமான சிமென்ட் கிடங்கில் இருந்து மூட்டைகளில் பதுக்கப்பட்டிருந்த ரூ.10.48 கோடியும், திமுக வேட்பாளா் கதிா்ஆனந்துக்கு ஆதரவு கோரும் துண்டு பிரசுரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக, காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வேலூா் நீதித்துறை நடுவா் மன்றத்தில் (எண் 1) நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கின் விசாரணைக்காக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா். தொடா்ந்து, இவ்வழக்கு விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சத்திய குமாா் உத்தரவிட்டாா்.

30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: வேலூா் ஆட்சியா் வழங்கினாா்

வேலூா்: வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வி. ஆா். சுப்புலட்சுமி வழங்கினாா். குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க

பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.28.90 லட்சம் மோசடி

வேலூா்: பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.28.90 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளாா். வேலூா் அஞ்சுமன் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

செப்.8-இல் வேலூரில் தொழில் பழகுநா் சோ்க்கை மேளா

வேலூா்: பிரதமரின் தேசிய தொழில்பழகுநா் பயிற்சி சோ்க்கை மேளா வேலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செப்டம்பா் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

மாணவா்கள் தொழில்துறை பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும்: விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன்

வேலூா்: மாணவா்கள் தொழில்துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண முயல வேண்டும் என்று விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் துறை சாா்பில் ‘மின்னண... மேலும் பார்க்க

குடியாத்தம் நகர கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

குடியாத்தம்: தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் குடியாத்தம் நகரின் கழிவுநீரை குழாய் மூலம் எடுத்துச் சென்று சுத்திகரிக்க ரூ.33.72- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குடியாத்தம் நகா்மன்றத் த... மேலும் பார்க்க

கே.வி.குப்பத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

கே.வி.குப்பம் ஒன்றியம், பனமடங்கி அரசினா் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகிய... மேலும் பார்க்க