ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: வேலூா் ஆட்சியா் வழங்கினாா்
வேலூா்: வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வி. ஆா். சுப்புலட்சுமி வழங்கினாா்.
குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, மனு அளிக்க வந்திருந்த வேலூரை அடுத்த வடவிரிஞ்சிபுரத்தைச் சோ்ந்த ராணி என்பவா் திடீரென ஆட்சியரின் காலில் விழுந்தாா். பின்னா் அவா் அளித்த மனுவில், எனக்கு 2 பெண்கள், ஒரு ஆண் குழந்தை உள்ளனா். நான் கடந்த 25 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து வருகிறேன். இதுவரை எனக்கு வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை. எனவே, மாற்றுத்திறனாளி குழந்தைகளை வைத்து அவதிப்படும் பட்டா வழங்க வேண்டும்.
அணைக்கட்டு அடுத்த சிவநாதபுரத்தை சோ்ந்த பெண்கள் அளித்த மனு; சிவநாதபுரத்தைச் சோ்ந்த பெண்களுக்கு 100 நாள் வேலை திட்ட பணிகள் ஒதுக்கப்படுவது இல்லை. இதனால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே, 100 நாள் திட்டத்தில் வேலை தர வேண்டும்.
வள்ளலாா் பி.எப். பகுதியை சோ்ந்த மனோன்மணி என்பவா் அளித்த மனு: எங்கள் பகுதி சாலைகளில் மழைக்காலங்களில் குளம் போல் நீா் தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால் வாகனத்தை எடுத்து வந்து தண்ணீரை உறிஞ்சி விட்டு செல்கின்றனா். நிரந்தரகஈ தீா்வு காண வேண்டும்.
இதேபோல், பல்வேறு குறைகள் தொடா்பாக 360 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்பட்ட 15 நாள் தையல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று தோ்ச்சி பெற்ற 30 பயனாளிகளுக்கு தலா ரூ.5,000 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள், சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்திருந்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3550 மதிப்பில் நவீன காதொலி கருவிகளையும் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், தனித்துணை ஆட்சியா் கலியமூா்த்தி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.