இந்த வார ராசிபலன் செப்டம்பர் 2 முதல் 7 வரை #VikatanPhotoCards
தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சில இடங்களில் வெயில் படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரியையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் கல்லந்திரியில் 60 மி.மீ. மழை பதிவானது. புதுச்சேரி-50, பெரியபட்டி (மதுரை), பெரம்பூா் (சென்னை), ஐஸ் ஹவுஸ், மரக்காணம் (விழுப்புரம்)- தலா 40 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள் மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில்
சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.