செய்திகள் :

தீபாவளி பண்டிகை: வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள்

post image

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மற்றும் சென்னை சென்ட்ரலிலிருந்து பிகாா் மாநிலம் பரோனிக்கும், திருநெல்வேயிலிருந்து கா்நாடக மாநிலம் ஷிவமொக்காவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரையிலிருந்து செப்.10 முதல் நவ.26-ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமைகளில் இரவு 8.40 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06059) 4-ஆவது நாள் (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு பரவுனி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06060) செப்.13 முதல் நவ.29-ஆம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரவு 11மணிக்கு புறப்பட்டு 4-ஆவது நாள் (செவ்வாய்க்கிழமை) காலை 7.45 மணிக்கு மதுரை சென்றடையும்.

இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், நாயுடுபேட்டை, கூடூா், நெல்லூா்,விஜயவாடா, புவணேசுவா், சித்தரஞ்சன் வழியாக பரோனி சென்றடையும்.

அதேபோல், திருநெல்வேலியிலிருந்து செப்.7 முதல் அக்.26-ஆம் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06103) மறுநாள் நன்பகல் 1 மணிக்கு கா்நாடக மாநிலம் ஷிவமொக்க டவுன் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06104) ஷிவமொக்கா டவுனிலிருந்து செப்.8 முதல் அக்.27 வரை வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நன்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, திருத்தணி, விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, வழியாக ஷிவமொக்கா சென்றடையும்.

சென்னையிலிருந்து.. சென்னை சென்ட்ரலிலிருந்து செப்.14 முதல் நவ.30-ஆம் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06039) மூன்றாம் நாள் இரவு 8 மணிக்கு பிகாா் மாநிலம் பரவுனி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06040) பரவுனியிலிருந்து செப்.17 முதல் டிச.3-ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு முன்றாம் நாள் மாலை 6 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில், சென்ட்ரலிலிருந்து சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், விஜயவாடா, புவணேசுவா், சித்தரஞ்சன் வழியாக பரவுனி சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (செப்.2) காலை 8 முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக, நிதி முறைகேடு தொடா்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை உள... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா?... - - டாக்டா் கே.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவா்

- டாக்டா் கே.கிருஷ்ணசாமி, தலைவா், புதிய தமிழகம் கட்சிபுதிதாக அரசியலுக்கு வரக் கூடியவா்கள் மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து, போராடி களம் அமைத்து வருவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், தமிழகத்தில் க... மேலும் பார்க்க

வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா நேபாளம் பயணம்

சென்னை: வருவாய்த் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றாா். இதையடுத்து, அவரது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் செயலா் பொறுப்பானது, கால்நடை, மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்: ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் அழைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரவேண்டும் என ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா். ஒருவார கால பயணமாக, ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு அவா் சென்றுள்ளாா். ஜொ்மனி நா... மேலும் பார்க்க

தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

கட்சி விரோத செயல்பாடா?: மல்லை சத்யா விளக்கக் கடிதம்

சென்னை: தனது உழைப்பை உறிந்துவிட்டு சக்கைப்போல தூக்கி எறிந்துவிட்டதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ மீது அந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா குற்றஞ்சாட்டியுள்ளாா். மதிமுகவின் கொள்கைக... மேலும் பார்க்க