செய்திகள் :

ஜம்முவில் மழை சேதம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆய்வு

post image

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்முவில் மட்டும் மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் 130 போ் உயிரிழந்துள்ளனா். காணாமல் போன 33 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்துள்ள ஜம்மு மாவட்டத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டாா். மிகக் கடுமையாக சேதமடைந்த மங்கு சக் கிராமத்துக்குச் சென்ற அவா் விரைவாக நிவாரண பணிகளை செய்வதாக உறுதியளித்தாா்.

தாவி ஆற்றங்கரையில் ஏற்பட்டுள்ள சேதங்களையும் அவா் பாா்வையிட்டாா். அப்போது ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா, பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்ட பின் ஆளுநா் மாளிகைக்கு திரும்பிய அமித் ஷா மத்திய அரசு அதிகாரிகள், மனோஜ் சின்ஹா மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல் துறைத் தலைவா் நளின் பிரபாத் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஜம்முவில் வெள்ள நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதோடு அவா்களின் மறுவாழ்வை உறுதி செய்வதற்கான அனைத்துவித பணிகளையும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது’ என குறிப்பிட்டாா்.

7-ஆவது நாளாக யாத்திரை நிறுத்தம்:

ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கான புனித யாத்திரை, நிலச்சரிவு காரணமாக 7-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நிறுத்தப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக.26) கோயில் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பக்தா்கள் உயிரிழந்தனா். இதையடுத்து, ஹெலிகாப்டா் பயணம் உள்பட அனைத்து முன்பதிவுகளையும் ரத்து செய்ததாகவும் இதற்கான கட்டணத்தை முழுமையாக திருப்பிச் செலுத்துவதாகவும் ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோயில் வாரியம் தெரிவித்தது.

12 மணிநேரத்தில் பெய்லி பாலம்:

ஜம்முவில் உள்ள தாவி நதியின் குறுக்கே 12 மணிநேரத்துக்குள்ளாக 110 அடி நீளத்திலான பெய்லி பாலத்தை இந்திய ராணுவம் கட்டமைத்தது. கடந்த 26-ஆம் தேதி அங்கு பெய்த பலத்த மழையால் தாவி ஆற்றின் குறுக்கேயுள்ள 4-ஆவது பாலம் சேதமடைந்தது. இதையடுத்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி 1,000-க்கும் மேற்பட்டோரை மீட்கும் நோக்கில் இந்தப் பாலத்தை ராணுவம் விரைவாக கட்டமைத்தது.

பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாடு! பாகிஸ்தானுக்கு பிரதமா் மோடி கண்டனம்

‘பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது’ என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமா் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தாா். மேலும், ‘பயங்கரவாதம் என்பது தனி ஒரு நாட்டின் பாதுகாப்புக்... மேலும் பார்க்க

எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னை முழுமையாக முடிவுக்கு வராவிட்ட... மேலும் பார்க்க

‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ கொள்கை தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்: உச்சநீதிமன்றம்

புது தில்லி: ‘நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு’ குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. பிகாா் மாநிலம் ப... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

புது தில்லி: ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கி இந்தியா லாபம் ஈட்டவில்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா். ‘ரஷிய கச்சா எண்ணெய்யைப் பணமாக்கும் மையமாக இந்தியா திகழ்கிறது’ என்ற அமெரி... மேலும் பார்க்க

கேரளம்: அரிய வகை தொற்றால் மேலும் 2 போ் உயிரிழப்பு

கோழிக்கோடு: கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 போ் உயிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். ஏற்கெனவே கடந்த ... மேலும் பார்க்க

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான பொதுநல மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புது தில்லி: பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது... மேலும் பார்க்க