தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி என முதலீட்டாளர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார்.
ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “ஐரோப்பாவின் முதுகொலும்பாக இருக்கும் ஜெர்மனிக்கு வந்திருப்பதில் மிகவும் பெருமையடைகிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இரண்டாவது பொருளாதாரம்.
The Germany leg of my overseas investment mission concludes on a strong note
— M.K.Stalin (@mkstalin) September 2, 2025
At the #TNRising Germany Investment Conclave, 23 MoUs worth Rs. 3,819 crore were signed, set to generate over 9,000 jobs. Global leaders across renewable energy, automotive components and… pic.twitter.com/ku3D0kIqd1
இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியையும், உற்பத்தி வளர்ச்சியையும் அடைந்திருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தொழில்துறை நாடாக இருக்கிறதோ, அதேபோல இந்திய ஒன்றியத்தில் தொழில் துறையின் இதயத் துடிப்பாக தமிழ்நாடு இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி.
TNRising என்ற ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அவற்றின்மூலம், 9,000-க்கும் மேற்பட்டோருக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியும்.
ஒட்டுமொத்தத்தில், ஜெர்மனி பயணத்தில் ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன்மூலம், தமிழகத்தில் 15,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்” என்றார்.
முன்னதாக, ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் நார் பிரெம்ஸ், நார்டெக்ஸ், குழுமம், இ.பி.எம்.-பாப்ஸ்ட் ஆகிய 3 நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.