தில்லி கலவர வழக்கு: ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபட...
மனித நுரையீரலில் வளர்ந்த பட்டாணிச் செடி!
மூச்சு விட முடியாமல் அபாய கட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோன் ஸ்வேடன் என்பவரின் நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
காரணம், அது பார்க்க செடி போல இருக்கிறது. ஆனால், மருத்துவர்களோ ஏதேனும் வைரஸாக இருக்கலாம் என்றே கருதினார்கள். ஆனால், தொடர் ஆராய்ச்சியில் தெரிய வந்தது அது பட்டாணிச் செடி.
பழத்தை பார்த்து சாப்பிடு, கொட்டையை முழுங்கிவிட்டால் வயிற்றுக்குள் மரம் வளரும் என்று பெரியவர்கள், குழந்தைகளை எச்சரிப்பார்கள். இது கொட்டையை முழுங்கினால் அது தொண்டையை அடைத்துக் கொள்ளும் என்பதற்காகக் கொடுக்கப்பட்ட பொய் மிரட்டல் என்றுதான் இந்த சம்பவம் நடக்கும் முன்புவரை அனைவரும் கருதியிருப்பார்கள்.
ஆனால், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, ரோன் ஸ்வேடன் என்பவருக்கு நேர்ந்த அதிசயம், இன்று வரை உலகையே ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.
ஒரு சில மாத காலமாகவே ரோன் கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் தனக்கு நுரையீரல் புற்றுநோய் வந்திருக்கலாம் என்றே கருதியிருந்தார். ஆனால், எக்ஸ்ரேவில் அவருடைய நுரையீரலில் பட்டாணிச் செடி வளர்ந்திருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
மருத்துவர்கள் இது பற்றி கூறுகையில், சமைக்கப்படாத பட்டாணியை ரோன் சாப்பிடும்போது, தவறுதலாக அது நுரையீரலுக்குள் சென்றுவிட்டிருக்கிறது. பிறகு எப்படியோ அது வேர் ஊன்றி வளரத் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள்.