முதல் ஒருநாள்: தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு; 131 ரன்களுக்கு சுருண்ட இங்கிலா...
போதிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகும் மதராஸி!
நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் திரைக்கு வருகிறது.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படம் வருகிற செப். 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அமரன் படத்தின் பெரும் வெற்றிக்குப் பின் திரைக்கு வரும் சிவகார்த்திகேயன் படமென்பதால் அவரின் ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர். ஆனால், மதராஸியின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் சரியான புரமோஷன்களை செய்யாததால் படத்தின் மீது பெரிதாக எதிர்பார்ப்புகள் எழவில்லை.
முன்னதாக, அமரனை வைத்து மதராஸியின் வெளியீட்டு உரிமத்தை அதிக தொகைக்கு விற்பனை செய்ய தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாகவும் அவ்வளவு தொகை கொடுத்து வாங்க எந்த விநியோகிஸ்தரும் தயாராக இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்தக் காரணங்களைத் தவிர்ந்து, தமிழகத்தில் சரியான புரமோஷன்கள் செய்யப்படாததால் இப்படம் வருவதே பலருக்குத் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, படத்திற்கான முதல்நாள் டிக்கெட் முன்பதிவுகளும் மிகச் சுமாராக நடைபெற்று வருவதால் எஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதராஸி திரைப்படம் நன்றாக இருந்தால் மட்டுமே வணிக வெற்றியைப் பெறும் என்றும் இல்லையென்றால் கடும் தோல்வியைச் சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அடுத்தடுத்து பெரிய படங்கள்! பான் இந்திய ஸ்டாராகும் ருக்மணி வசந்த்!