செய்திகள் :

6 படங்களிலேயே 22 ஹீரோக்களை இயக்கிவிட்டேன்: லோகேஷ் கனகராஜ்

post image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் கதை நாயகர்களைக் குறித்து பேசியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஆமிர் கான், நாகர்ஜுனா, உபேந்திரா, ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.

முக்கியமாக, அனிருத் பின்னணி இசை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், நிகழ்வு ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், “என் திரைப்படங்களில் பெரிய நட்சத்திர நடிகர்களை நடிக்க வைப்பதும் என் வேலையின் ஒரு பகுதிதான். சினிமாவுக்கு வந்த 9 ஆண்டுகளில் 6 திரைப்படங்கள்தான் எடுத்திருக்கிறேன். ஆனால், இத்துறையில் பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறேன். இந்த 6 படங்களிலேயே 22 ஹீரோக்களை இயக்கிவிட்டேன். இதை பெருமையாகவே சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: போதிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகும் மதராஸி!

director lokesh kanagaraj spokes about his film heroes

யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு - புகைப்படங்கள்

கனமழையால் யமுனை ஆற்றின் நீா் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கனமழைக்குப் பிறகு தங்களின் உடமைகளை எடுத்து செல்லும் மக்கள்.இடைவிடாத பெய்த கனமழையால் யமுனை நதி உயர்ந்து தலைநகரின் தாழ்வான பகுதிகளில் வெள... மேலும் பார்க்க

நடிகர் குரியகோஸ் ரங்கா காலமானார்!

நடிகரும் திரை எழுத்தாளருமான குரியகோஸ் ரங்கா உடல்நலக்குறைவால் காலமானார். இயக்குநர் விசுவின் திரைப்படங்களில் அதிகம் பணியாற்றியவர் குரியகோஸ் ரங்கா என்கிற ரங்கநாதன். விசுவின் மைத்துனரான இவர், ’அவள் சுமங்க... மேலும் பார்க்க

கட்டா குஸ்தி - 2 படப்பிடிப்பு துவக்கம்!

விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் கடந்த 2022-இல் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் ... மேலும் பார்க்க

பிக் பாஸ் 9 போட்டியாளராகும் சின்ன திரை நடிகை?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சின்ன திரை நடிகை நக்‌ஷத்ரா பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று நடனக் கலைஞரும் சமையல் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான ஜன்மோனி டோலியும் பங்கேற்கவுள்ளதாகக் க... மேலும் பார்க்க