செய்திகள் :

நடிகர் குரியகோஸ் ரங்கா காலமானார்!

post image

நடிகரும் திரை எழுத்தாளருமான குரியகோஸ் ரங்கா உடல்நலக்குறைவால் காலமானார்.

இயக்குநர் விசுவின் திரைப்படங்களில் அதிகம் பணியாற்றியவர் குரியகோஸ் ரங்கா என்கிற ரங்கநாதன். விசுவின் மைத்துனரான இவர், ’அவள் சுமங்கலிதான்’ படத்தில் குரியகோஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் ரங்கா என்கிற தன் பெயருடன் குரியகோஸை இணைத்துக்கொண்டார்.

விசு இயக்கிய மணல் கயிறு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியவர் ஊருக்கு உபதேசம் (திரைக்கதை, வசனம் எழுதினார்), நாலு பேருக்கு நன்றி, முத்துக்கள் உள்ளிட்ட படங்களிலும் கவனம் ஈர்க்கும் கதாபாத்திரங்களில் நடித்தார்.

ஆச்சரியமாக, சினிமாவுக்கு வருவதற்கு முன்பே 1000-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களிலும் ஆர்வமாக செயல்பட்டு வந்த குரியகோஸ் ரங்கா நேற்று (செப். 1) இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

குரியகோஸ் ரங்கா

இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

vetaran actor kuriyacose ranga passed away

கட்டா குஸ்தி - 2 படப்பிடிப்பு துவக்கம்!

விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் கடந்த 2022-இல் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் ... மேலும் பார்க்க

6 படங்களிலேயே 22 ஹீரோக்களை இயக்கிவிட்டேன்: லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் கதை நாயகர்களைக் குறித்து பேசியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஆமிர... மேலும் பார்க்க

பிக் பாஸ் 9 போட்டியாளராகும் சின்ன திரை நடிகை?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சின்ன திரை நடிகை நக்‌ஷத்ரா பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று நடனக் கலைஞரும் சமையல் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான ஜன்மோனி டோலியும் பங்கேற்கவுள்ளதாகக் க... மேலும் பார்க்க

போதிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகும் மதராஸி!

நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் திரைக்கு வருகிறது.ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மதரா... மேலும் பார்க்க