France: "தினமும் 100 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை"- மருத்துவமனைகளை போருக்கு தயார்...
கட்டா குஸ்தி - 2 படப்பிடிப்பு துவக்கம்!
விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் கடந்த 2022-இல் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நடிகர் விஷ்ணு விஷாலே தயாரித்த இந்தப் படத்தை சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பு நேற்று (செப். 1) வெளியானது.
இந்த நிலையில், கட்டா குஸ்தி - 2 படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை வேல்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிக்க, செல்ல அய்யாவு இயக்க, நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க உள்ளார்.
இதையும் படிக்க: 6 படங்களிலேயே 22 ஹீரோக்களை இயக்கிவிட்டேன்: லோகேஷ் கனகராஜ்