செய்திகள் :

பிக் பாஸ் 9 போட்டியாளராகும் சின்ன திரை நடிகை?

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சின்ன திரை நடிகை நக்‌ஷத்ரா பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று நடனக் கலைஞரும் சமையல் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான ஜன்மோனி டோலியும் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் பிரபலங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நிகழ்ச்சியே பிக் பாஸ். இடையிடையே போட்டியாளர்களின் மனநிலைக்கு ஏற்ப போட்டிகளும் நடத்தப்படும்.

இதில், மக்கள் மனங்களைக் கவர்ந்த போட்டியாளர் அதிக வாக்குகள் பெற்று போட்டியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 9வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆனால், 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இம்முறை பிக் பாஸ் 9வது சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளோர் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நக்‌ஷத்ரா

அந்தவகையில், சின்ன திரை நடிகை நக்‌ஷத்ரா போட்டியாளராக பங்கேற்கவுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நக்‌ஷத்ரா. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ள இவர், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால், உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளுக்கு பஞ்சமிருக்காது என்பதே ரசிகர்கள் கருத்தாக உள்ளது.

ஜன்மோனி டோலி

இதேபோன்று, குக் வித் கோமாளி -6 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ள ஜன்மோனி டோலியும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்லவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அஸ்ஸாமை சேர்ந்த இவர், தமிழ்நாட்டில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

தொழில்முறை நடனக் கலைஞரான இவர், பிக் பாஸ் வீட்டிற்குச் செல்வது உறுதியானால், வேறு ஒரு பரிமாணத்தை இவரிம் எதிர்பார்க்கலாம் என கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

எனினும், தொலைக்காட்சி தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ஆல்யா மானசாவின் பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

Nakshathra Nagesh and Janmoni Dolly to enter Bigg boss 9

நடிகர் குரியகோஸ் ரங்கா காலமானார்!

நடிகரும் திரை எழுத்தாளருமான குரியகோஸ் ரங்கா உடல்நலக்குறைவால் காலமானார். இயக்குநர் விசுவின் திரைப்படங்களில் அதிகம் பணியாற்றியவர் குரியகோஸ் ரங்கா என்கிற ரங்கநாதன். விசுவின் மைத்துனரான இவர், ’அவள் சுமங்க... மேலும் பார்க்க

கட்டா குஸ்தி - 2 படப்பிடிப்பு துவக்கம்!

விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் கடந்த 2022-இல் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் ... மேலும் பார்க்க

6 படங்களிலேயே 22 ஹீரோக்களை இயக்கிவிட்டேன்: லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் கதை நாயகர்களைக் குறித்து பேசியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஆமிர... மேலும் பார்க்க

போதிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகும் மதராஸி!

நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் திரைக்கு வருகிறது.ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மதரா... மேலும் பார்க்க