விவசாயிகளுக்கு திமுக அரசால் துரோகம்: எடப்பாடி பழனிசாமி
விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தை மதுரை மேலூரில் இன்று எடப்பாடி பழனிசாமி இன்று மேற்கொண்டார்.
தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது,
விவசாய பெருமக்கள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்தது அதிமுக. ஆனால், பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது திமுக அரசு.
திமுக தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், 98% அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக திமுகவினர் பேசுகின்றனர். இது முழுக்க முழ்க்கப் பொய், தமிழக மக்களை ஏமாற்றுகின்றனர்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மக்களின் மனுக்கள் ஆற்றில் வீசப்படுகிறது. அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திட்டங்களை அறிவித்து ஆசை வார்த்தைக்கூறி மக்களை ஏமாற்றுகிறது திமுக.
67% மின் கட்டண உயர்வை மக்கள் தலையில் கட்டியதுதான் திமுக செய்த சாதனை. வீடு, கடைகளுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
திமுக தடை செய்த அதிமுகவின் அம்மா மினி கிளினிக் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். தமிழ்நாடு முழுக்க 4 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படும்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்ததும் வைகை அணை தூர்வாரப்படும் என எடப்பாடி பழனிசமி பேசினார்.
இதையும் படிக்க |பெண் அதிகாரியுடன் வாக்குவாதம்? காத்திருப்போர் பட்டியலுக்கு உதவி ஆணையர் மாற்றம்!