The Rock: ஆளே மாறிப்போன டுவெய்ன் ஜான்சன்; ரசிகர்கள் ஷாக் ஆக காரணம் என்ன?
செப்டம்பர் 1ம் தேதி வெனிஸ் திரைப்படவிழாவுக்கு சென்ற ஹாலிவுட் நடிகர் டுவெய்ன் ஜான்சன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அவரது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான தி ஸ்மாஷிங் மிஷின் (The Smashing Machine) இந்த திரைப்படவிழாவில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்படுகிறது. அனால் அவர் இணையத்தில் பேசு பொருளாக இருக்க அது காரணமல்ல.

தி ராக் என அழைக்கப்படும் ஜான்சன் கட்டுமஸ்தான உடற்கட்டு கொண்டவர். சினிமாவிலும், சண்டை நிகழ்ச்சியிலும் அவரது உடலமைப்பு அவரது அடையாளமாக இருந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அவர் உடல் மெலிந்த தோற்றத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆனாலும் நீலநிற சட்டை, கருப்பு நிற கால்சட்டையில் ஸ்டைலாக வந்திருக்கிறார் அவர்.
இணையவாசிகள் ஜான்சனின் மாற்றத்துக்கு பலவிதங்களில் எதிர்வினையாற்றி வருகின்றனர். சிலர் அவர் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டதாகக் கணிக்கின்றனர். சிலர் 'ராக் (பாறை) கூழாங்கல் ஆகிவிட்டார்' என கிண்டலும் செய்துள்ளனர்.
The Rock drops 28KG!
— Jack Billion (@jackkbillion) September 1, 2025
Dwayne “The Rock” Johnson shed nearly 28 kg to focus on health, agility, and longevity.
Doctors warned his physique could harm his long-term health.
Years of training left him feeling heavy and inflamed, with joint strain. pic.twitter.com/fwUSRklrqA
வழக்கமாக 135+ கிலோ எடையிருக்கக் கூடிய டுவெய்ன் ஜான்சன், தற்போது 100 கிலோ இருப்பார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அவர் பேசிய பாட்காஸ்ட் ஒன்றில் ஆரோக்கியம் குறித்த தனது பார்வை மாறியதாக தெரிவித்திருந்தார் ஜான்சன்.
ஒருமுறை மருத்துவர்கள் அவரை இதய நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியிருக்கின்றனர். பின்னர் உண்மையான பிரச்னை குடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஆன்டிபயோட்டிக் எடுத்துவந்தது காரணம் எனத் தெரியவந்துள்ளது.
அந்த சம்பவத்துக்குப் பிறகு கச்சிதமாகத் தோற்றமளிப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறி அல்ல என்பதை உணர்ந்துள்ளார் டுவெய்ன் ஜான்சன். ஆரோக்கியம் என்பது தசைகள் பெரியதாக இருப்பது மட்டுமல்ல எனக் பேசியுள்ளார். இதுவே இவர் உடல் எடைக் குறைப்புக்கும் காரணமாக இருக்கலாம் என கணிக்கின்றனர் ரசிகர்கள்.