செய்திகள் :

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாறு படைத்த ரஷித் கான்!

post image

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் வரலாறு படைத்துள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான முத்தரப்பு டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது.

வரலாறு படைத்த ரஷித் கான்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

நேற்றையப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரஷித் கான் படைத்தார். அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 165 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இதற்கு முன்னதாக, சர்வதேச டி20 போட்டிகளில் 164 விக்கெட்டுகளுடன் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிம் சௌதி முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Afghanistan's Rashid Khan has created history by taking the most wickets in T20 Internationals.

இதையும் படிக்க: உலகக் கோப்பைக்கான பேட்டிங் பயிற்சியாளரை நியமித்த நியூசிலாந்து!

முதல் ஒருநாள்: இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 ... மேலும் பார்க்க

முதல் ஒருநாள்: தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு; 131 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகி... மேலும் பார்க்க

உலகக் கோப்பைக்கான பேட்டிங் பயிற்சியாளரை நியமித்த நியூசிலாந்து!

நியூசிலாந்து அணியின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக கிரைக் மெக்மில்லன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. இந்த ... மேலும் பார்க்க

எஸ்ஏ20 ஏலம்.. டெவால்டு பிரேவிஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்பட 500 வீரர்கள் பதிவு!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 போட்டியான எஸ்ஏ20 போட்டித் தொடரின் 4-வது சீசனுக்கு ஏலப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 22 வயதான டெவால்டு பிரேவிஸ் முதல் 43 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் வரை பதிவு செய... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த ஐக்கிய அரபு அமீரக கேப்டன்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் கேப்டன் முகமது வாசிம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தா... மேலும் பார்க்க

33 வயதிலேயே ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஃபினிஷருமான ஆசிஃப் அலி, அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். 33 வயதான ஆசிஃப் அலி, பாகிஸ்தான் அணிக்காக 58... மேலும் பார்க்க