உலகக் கோப்பைக்கான பேட்டிங் பயிற்சியாளரை நியமித்த நியூசிலாந்து!
நியூசிலாந்து அணியின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக கிரைக் மெக்மில்லன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. விரைவில் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளதால், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான கிரைக் மெக்மில்லன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற நியூசிலாந்து மகளிரணியின் பயிற்சியாளர்கள் குழுவில் மெக்மில்லன் அங்கம் வகித்துள்ளார். 48 வயதாகும் மெக்மில்லன் நியூசிலாந்து அணிக்காக 55 டெஸ்ட், 197 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7500 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார்.
நியூசிலாந்து மகளிரணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து கிரைக் மெக்மில்லன் பேசியதாவது: நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. திறமைவாய்ந்த நியூசிலாந்து அணியுடன் இணைந்து மீண்டும் செயல்படவுள்ளது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
Craig McMillan has been appointed as the batting and fielding coach of the New Zealand team.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த ஐக்கிய அரபு அமீரக கேப்டன்!