செய்திகள் :

33 வயதிலேயே ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!

post image

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஃபினிஷருமான ஆசிஃப் அலி, அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

33 வயதான ஆசிஃப் அலி, பாகிஸ்தான் அணிக்காக 58 டி20 போட்டிகளிலும், 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், இவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது கிடையாது.

இதில், 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 12 பந்துகளில் 24 ரன்கள் தேவையான நிலையில், 4 சிக்ஸர்கள் விளாசியதுடன் 7 பந்துகளில் 25 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்திருந்தார்.

இவர், கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்தார். அதன்பின்னர், அணியில் தேர்வாகவில்லை.

நடுவரிசையில் விளையாடும் அதிரடி ஆட்டக்காரரான ஆசிஃப் அலி டி20 போட்டிகளில் 577 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 382 ரன்களும் குவித்துள்ளார்.

இதில், 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.

தனது ஓய்வு முடிவு குறித்து ஆசிஃப் அலி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒண்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பாகிஸ்தான் அணியின் சீருடையை அணிவது மிகப் பெரிய கௌரவம். மேலும், கிரிக்கெட் திடலில் என்னுடைய நாட்டுக்காக சேவையாற்றியது பெருமையான அத்தியாயமாகும்.

உலகக் கோப்பைத் தொடரில் எனது மகள் இறந்தபோது, ஒவ்வொரு மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் என்னை ஆதரித்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Pakistan’s Asif Ali retires from international cricket at 33

இதையும் படிக்க : ஜேமி ஓவர்டன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு! 2 போட்டிகளில் திடீர் முடிவு!

உலகக் கோப்பைக்கான பேட்டிங் பயிற்சியாளரை நியமித்த நியூசிலாந்து!

நியூசிலாந்து அணியின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக கிரைக் மெக்மில்லன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. இந்த ... மேலும் பார்க்க

எஸ்ஏ20 ஏலம்.. டெவால்டு பிரேவிஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்பட 500 வீரர்கள் பதிவு!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 போட்டியான எஸ்ஏ20 போட்டித் தொடரின் 4-வது சீசனுக்கு ஏலப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 22 வயதான டெவால்டு பிரேவிஸ் முதல் 43 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் வரை பதிவு செய... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த ஐக்கிய அரபு அமீரக கேப்டன்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் கேப்டன் முகமது வாசிம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தா... மேலும் பார்க்க

ஜேமி ஓவர்டன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு! 2 போட்டிகளில் திடீர் முடிவு!

இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டரான ஜேமி ஓவர்டன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையிலான ‘ஆண்டர்சர் - டெண்டுல்கர் டிராபி’ சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் ... மேலும் பார்க்க

பாட் கம்மின்ஸ் காயம்: இந்தியா, நியூசி. தொடரில் இருந்து விலகல்!

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள், டெஸ்ட் கேப்டன் பா... மேலும் பார்க்க

சர்வதேச டி20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ‘திடீர்’ ஓய்வு!

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.Mitchell Starc announces retirement from T20Is to focus on Tests, ODI W... மேலும் பார்க்க