ஆப்பிள் ஐஃபோன் 17 அறிமுகம் எப்போது? இந்தியாவில் அதன் விலை??
ஆப்பிள் ஐஃபோன் 17 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் ஆகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துளள்து. அதன்படி, ஆப்பிள் ஐஃபோன் 17 செப். 9ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, ஐஃபோன் 17, ஐஃபோன் 17 ப்ரோ, ஐஃபோன் 17 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட வரிசைகளும் அடுத்தடுத்து விற்பனைக்கு வரவிருக்கின்றன.
இவற்றுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கும் என்றும், விற்பனை செப்.19ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஐஃபோன்17 என்ற அடிப்படை மாடல் விலை இந்தியாவில் ரூ.79,990 என்ற அளவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே, ஐஃபோன் 17 ப்ரோ ரூ.1,24,990 ஆகவும், மிக அதிக வசதிகள் கொண்ட ஐஃபோன் 17 ப்ரோ மேக்ஸ் இதுவரை வெளியிடப்பட்ட ஐஃபோன்களிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக அதாவது ரூ.1,64,990 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.