செய்திகள் :

பாலிவுட்டில் பாலின பாகுபாடு: "நடிகர்களுக்கு மட்டும் நல்ல கார், அறை; ஆனால்" - கிருத்தி சனோன் வேதனை

post image

பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் ஐநா சபையின் பாலின சமத்துவத்திற்கான கெளரவ இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆண் மற்றும் பெண் இடையே இருக்கும் பாரபட்சமான போக்கை நீக்கவும், இது தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கும் தவறான அபிப்பிராயத்தை அகற்றும் நடவடிக்கையில் கிருத்தி சனோன் ஈடுபடுவார்.

இது தொடர்பாக கிருத்தி சனோன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ''நான் முற்போக்கான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், என்னைச் சுற்றி நடக்கும் சமத்துவமின்மையைப் புறக்கணித்து விட முடியாது.

எனது பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்பவர்களாக இருந்ததால் இருவரும் வீட்டில் தங்களது பொறுப்புக்களைச் சமமாகப் பகிர்ந்து கொள்வர். நானும் எனது சகோதரியும் பெண் என்ற காரணத்திற்காகப் பாலினத்தால் ஒருபோதும் கட்டுப்படுத்தப்படவில்லை. அது போன்ற ஒரு சூழலை எனது பெற்றோர் உருவாக்கினார்கள்.

ஆனால் எனது தாயாருக்கு அப்படி இல்லை. பெண்களை அனுமதிக்காத பல விஷயங்களில் ஆண் குழந்தைகளை அனுமதித்த காலத்தில் என் அம்மா வளர்ந்தார். பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், சமைக்க வேண்டும், விதிகளைப் பின்பற்ற வேண்டும். எனது தாயார் நீச்சல் அல்லது நடனம் கற்றுக்கொள்ள விரும்பினார்.

ஆனால் முடியவில்லை. அவர் படிப்புக்காக மட்டுமே போராடினார். அதன் மூலம் அவர் ஒரு பேராசிரியரானார். எனது தாயாரின் போராட்டம்தான் எனக்கும், எனது சகோதரிக்கும் மாறுபட்ட எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள், என்ன கனவு காண்கிறீர்களோ அதனைச் செய்யுங்கள். அது உங்களுக்குக் கிடைக்கும்.

க்ரிதி சனோன்
க்ரிதி சனோன்

பாலிவுட்டில் பாரபட்சத்தைப் பார்க்க முடிந்தது. அதிகமான நேரங்களில் அதனைப் பார்க்க முடியாவிட்டாலும், நடிகர்களுக்கு நல்ல கார் மற்றும் நல்ல ஹோட்டல் என்ற போன்ற சிறிய பாரபட்சத்தைப் பார்க்க முடிகிறது. அது காரை பற்றியது கிடையாது. ஆனால் நான் பெண் என்பதால் என்னை அது போன்று நினைக்க வைத்தது.

எதையும் சமமாகச் செய்யுங்கள். எதாவது நிகழ்ச்சிக்குக்கூட நடிகைகளை முதலில் கூப்பிட்டுக் காத்திருக்க வைத்துவிட்டு நடிகருக்காகக் காத்திருப்பார்கள்.

இது குறித்து நான் அவர்களிடம் எதுவும் தெரிவித்தது கிடையாது. ஆனால் இவ்விவகாரத்தில் உங்களது மனநிலையை மாற்றிக்கொள்வது அவசியம். வீடுகள் முதல் பணியிடங்கள் வரை அன்றாட பணிகளிலிருந்து பாலின சமத்துவம் தொடங்குகிறது. அது சிறிய விஷயங்களில் கூட சமத்துவமாக இருக்கவேண்டும் என்பதில் தொடங்குகிறது'' என்று தெரிவித்தார்.

நடிகை கிருத்தி சனோன் இந்தியில் நடிகர் தனுஷ் நடிக்கும் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"திருமணத்திற்குப் பிறகு கணவர் வீட்டில் ஷார்ட்ஸ் போட முடியவில்லை" - நடிகை ஹேமாமாலினி மகள் இஷா தியோல்

பா.ஜ.க எம்.பியும், நடிகையுமான ஹேமாமாலினியின் மகள் இஷா தியோல் கடந்த 2012ம் ஆண்டு மும்பையில் உள்ள இஸ்கான் கோயிலில் பரத் தக்தானி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக... மேலும் பார்க்க

"என்னை பாஜக ஆதரவாளர், வலதுசாரி என்கிறார்கள்; ஆனால்..."- `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' விவேக் அக்னிஹோத்ரி

'தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்', 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற படங்கள் நாடுமுழுவதும் கலவையான விமர்சனங்களைப் பெற்று பேசுபொருளாகி இருந்தன. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் விவேக் அக்னிஹோத்ரி. இவர் சமீபத்தில் "பா... மேலும் பார்க்க

Janhvi Kapoor: "திருப்பதி கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்யனும்"- ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஶ்ரீதேவி - போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.2018ம் ஆண்டு `Dhadak' திரைப்படம் மூலம் ஆரம்பித்தது இவரது பாலிவுட் திரையுலகப் பயணம். இன்று பல படங்களி... மேலும் பார்க்க

"மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் சண்டை வராது" - ஜான்வி கபூர் சொல்லும் லாஜிக்

மறைந்த நடிகை ஶ்ரீதேவி - போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.2018ம் ஆண்டு `Dhadak' திரைப்படம் மூலம் ஆரம்பித்தது இவரது பாலிவுட் திரையுலகப் பயணம். இன்று பல படங்களி... மேலும் பார்க்க

Sunny Leone: `குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை; கடவுள் வெறுப்பதாக நினைத்தேன்’ - சன்னி லியோன்

பிரபல நடிகையாக இருந்த நடிகை சன்னி லியோன், திரைத்துறையிலிருந்து சற்று விலகி, தனது குடும்ப வாழ்வில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது மட்டுமே நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.பஞ்சாபி குடும்பத... மேலும் பார்க்க

`மீண்டும் Leh-வில் சிக்கிக் கொண்டேன்; ஒரு விமானமும் இல்லை...' - லடாக்கில் நடிகர் மாதவன்

நடிகர் ஆர்.மாதவன் படப்பிடிப்புக்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக்கில் இருக்கும் லே என்ற இடத்துக்குச் சென்று இருந்தார். அங்கு தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் விமான போக்குவரத்து தடை... மேலும் பார்க்க