செய்திகள் :

`மீண்டும் Leh-வில் சிக்கிக் கொண்டேன்; ஒரு விமானமும் இல்லை...' - லடாக்கில் நடிகர் மாதவன்

post image

நடிகர் ஆர்.மாதவன் படப்பிடிப்புக்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக்கில் இருக்கும் லே என்ற இடத்துக்குச் சென்று இருந்தார். அங்கு தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் விமான போக்குவரத்து தடை பட்டுள்ளது. லே பகுதி முழுவதும் பனிபடர்ந்து அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவுக்கு இருக்கிறது. விமான நிலையத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் மழையால் மாதவனால் ஹோட்டல் அறையில் இருந்து வெளியில் வர முடியவில்லை. அவர் தொடர்ந்து ஹோட்டலில் முடங்கி கிடக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ``லடாக் மலை உச்சியில் லே பகுதியில் இருக்கிறோம். கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக லே விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விரைவில் வீடு வந்து சேருவேன் என்று நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் லடாக்கிற்கு வரும்போது இது போன்றுதான் நடக்கிறது. கடைசியாக 2008ம் ஆண்டு 3 இடியட்ஸ் படப்பிடிப்புக்கு வந்தபோது இதே போன்று ஆகஸ்ட் மாதம் முழுவதும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் படப்பிடிப்புக்காக காத்திருந்தோம். இப்போதும் அதே நிலைதான் இருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு பிறகு லேயில் சிக்கி இருக்கிறோம். மழையால் விமானம் இல்லை. விரைவில் வானம் தெளிவாகும் என்று நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 3 இடியட்ஸ் படத்தின் குறிப்பிட்ட பகுதி லடாக்கில்தான் படமாக்கப்பட்டது.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணுதேவி கோயிலுக்கு புனித பயணம் சென்ற ராஜஸ்தானை சேர்ந்த 4 சகோதரர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். வைஷ்ணுதேவி கோயிலுக்கு புனித பயணம் மேற்கொண்ட 30 பேர் காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

``நல்ல கன்டென்ட் உள்ள படைப்புகளுக்கு நெட்ஃப்ளிக்ஸ் முக்கியத்துவம் தருவதில்லை'' – அனுராக் காஷ்யப்

"நல்ல உள்ளடக்கம் கொண்ட படைப்புகளுக்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை" என்று பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் விமர்சித்துள்ளார்.இந்திய சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரா... மேலும் பார்க்க

``விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே வந்தோம்'' - மனைவியுடன் வந்த நடிகர் கோவிந்தா

கோவிந்தா - சுனிதா பத்திரிகையாளர் சந்திப்புபாலிவுட் நடிகர் கோவிந்தா, தனது மனைவி சுனிதா அஹுஜாவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் தகவல்கள் பரவியது. சுனிதா அஹுஜா விவாகரத்து கேட்டு மும்பை குடும்பநல நீதி... மேலும் பார்க்க

"ஆமாம், என் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது" - மனம் திறந்த சச்சின்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் இடையிலான நிச்சயதார்த்தம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். 25 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கர், ச... மேலும் பார்க்க

Deepika Padukone: சமூக வலைத்தளத்தில் மகளின் படம்; ரகசியமாக வீடியோ எடுத்தவருடன் தீபிகா வாக்குவாதம்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிற்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்து அக்குழந்தையை வெளியுலகிற்குக் காட்டாமல் தீபிகா படுகோனே வளர்த்து வருகிறார். கு... மேலும் பார்க்க

Parineeti Chopra: 'எங்களின் சிறிய பிரபஞ்சம்' - கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பரிணீதி சோப்ரா

2011 ஆம் ஆண்டு 'Ladies vs Ricky Bahl' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பரிணீதி சோப்ரா. 'Ishaqzaade'என்ற தனது இரண்டாவது படத்திலேயே தேசிய விருதைப் பெற்றவர். தவிர 'Golmaal Again', 'Shuddh Desi ... மேலும் பார்க்க

பாலிவுட் நடிகர் கோவிந்தா விவாகரத்து விவகாரம்: "எல்லாம் சரியாகிவிட்டது" - வழக்கறிஞர் சொல்வது என்ன?

பாலிவுட் நடிகர் கோவிந்தாவை விவாகரத்து செய்ய அவரது மனைவி சுனிதா திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. 2024ம் ஆண்டு டிசம்... மேலும் பார்க்க