தில்லி கலவர வழக்கு: ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபட...
சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை!
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இன்று (செப்.2) இந்தியா வருகிறார்.
தலைநகர் தில்லிக்கு வருகைத் தரும் பிரதமர் லாரன்ஸ் வாங், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து உரையாடவுள்ளார். இதையடுத்து, மதியம் பிரதமர் மோடி அளிக்கும் விருந்திலும் அவர் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
பின்னர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களையும், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலையும் அவர் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், பிரதமர் வாங் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காத்தில் அஞ்சலி செலுத்துவார் எனவும், இந்தியாவில் வசிக்கும் சிங்கப்பூர் நாட்டினரையும், இந்திய தொழிலதிபர்களையும் சந்தித்து உரையாடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா - சிங்கப்பூர் இடையிலான ராஜந்திர உறவுகள் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பிரதமர் லாரன்ஸ் வாங்-ன் இந்தப் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: புரட்டிப்போடும் பருவமழை! சிவப்பு எச்சரிக்கையில் சிக்கித் தவிக்கும் மாநிலங்கள்