செய்திகள் :

ஜார்க்கண்டில் 9 நக்சல்கள் சரண்!

post image

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

லதேஹர் மாவட்டத்தில், ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷாத் எனும் அமைப்பில் இயங்கி வந்த 9 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சரணடைந்த நக்சல்களில் 5 பேரை ஏற்கெனவே, பாதுகாப்புப் படை அதிகாரிகள் வெகுமதி அறிவித்து தேடி வந்ததாகவும், அவர்களிடம் இருந்து ஏக, எஸ்.எல்.ஆர் ரகங்களைச் சேர்ந்த 12 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அம்மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, நாராயணப்பூர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் மூலம், அபூஹ்மத் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த, ஆக.27 ஆம் தேதி, சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் இயங்கி வந்த சுமார் 30 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பறவை மோதல்: நாக்பூரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

In Jharkhand, 9 Naxalites belonging to the Jharkhand Jan Mukti Parishad have reportedly surrendered to security forces.

5ஜி சந்தையை ஆக்கிரமித்துள்ள நிறுவனம் எது தெரியுமா?

கம்பிவட இணைப்பற்ற 5 ஜி சேவைகளை அதிக பயனர்களுக்கு வழங்கும் நிறுவனம் குறித்த தகவலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.இதன்படி, ஜியோ நிறுவனம் அதிக 5ஜி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாக... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐஃபோன் 17 அறிமுகம் எப்போது? இந்தியாவில் அதன் விலை??

ஆப்பிள் ஐஃபோன் 17 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் ஆகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துளள்து. அதன்படி, ஆப்பிள் ஐஃபோன் 17 செப். 9ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.இதனைத் தொடர்ந்து, ஐஃபோன் 17, ஐஃபோன் 17 ப்ரோ,... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மிதக்கும் பஞ்சாப்! 29 பேர் பலி!

பஞ்சாப் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பஞ்சாப் மாநிலத்தில் கனமழைக்கு 29 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரத்து... மேலும் பார்க்க

இந்தியாவில் மீண்டும் வருகிறதா டிக்டாக்? சீன உறவு காரணமா??

இந்தியாவில் டிக்டாக் செயலி வருவதற்கான சாத்தியக் கூறுகள் தற்போதைக்கு இல்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ், குருகிராமில் உள்ள அலுவலகத்தில் வேலை வாய்ப்ப... மேலும் பார்க்க

தில்லி கலவர வழக்கு: ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந... மேலும் பார்க்க

மகள் கவிதாவை கட்சியில் இருந்து நீக்கிய சந்திரசேகர் ராவ்!

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் கவிதாவை இடைநீக்ககுவதாக அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க