செய்திகள் :

பஞ்சாப் வெள்ளம்: அரசுக்கு எதிராகப் பேசிய ஆளும் கட்சி எம்எல்ஏ! பழைய வழக்கில் கைது!

post image

பஞ்சாப் வெள்ளம் குறித்து, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராகப் பேசிய ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா, அவர் மீதான பழைய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாபின் சனோர் தொகுதியின், ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர் ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா. சமீபத்தில், அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நீர்பாசனத் துறை செயலாளர் க்ரிஷன் குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமையைக் கண்டித்த அவர், வெள்ளத்திற்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டிருந்த விடியோவில், ஆம் ஆத்மி அரசு மக்களின் பேச்சைக் கேட்கவில்லை என்றால், 2027 சட்டப் பேரவைத் தேர்தலில் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும், பஞ்சாப் அரசை தில்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைவர்கள் ஆட்சி செய்ய முயல்வதாகவும், அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், பதான்மஜ்ராவின் முன்னாள் மனைவி தொடர்புடைய, பழைய வழக்கில், அவர் இன்று (செப்.2) கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சட்டப் பேரவை உறுப்பினராக, அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு நேற்று (செப்.1) திரும்ப பெற்றதாகவும், அரசுக்கு எதிராகப் பேசியதால் தன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடும் எனவும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை!

Ruling party MLA Harmeet Singh Pathanmajra, who spoke out against the Aam Aadmi Party government over the Punjab floods, has been arrested in an old case against him.

இந்தியாவில் மீண்டும் வருகிறதா டிக்டாக்? சீன உறவு காரணமா??

இந்தியாவில் டிக்டாக் செயலி வருவதற்கான சாத்தியக் கூறுகள் தற்போதைக்கு இல்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ், குருகிராமில் உள்ள அலுவலகத்தில் வேலை வாய்ப்ப... மேலும் பார்க்க

தில்லி கலவர வழக்கு: ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந... மேலும் பார்க்க

மகள் கவிதாவை கட்சியில் இருந்து நீக்கிய சந்திரசேகர் ராவ்!

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் கவிதாவை இடைநீக்ககுவதாக அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

என் தாயை அவமதித்ததால் மிகுந்த வேதனையடைந்தேன்: பிரதமர் மோடி

புது தில்லி: பிகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் அதிகார யாத்திரையின்போது, எனது தாயை அவமதித்ததால் மிகுந்த வேதனையடைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பிகாரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில், காணொலி வ... மேலும் பார்க்க

இந்திய சில்லுகள் உலகளாவிய மாற்றத்தை உருவாக்கும்: பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சில்லுகள் (சிப்) உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் இந்திய செமிகான் 2025 தொடக்க விழாவில் பிரதமர் மோடி க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 5 தீவிரவாதிகள் பலி, 6 காவலர்கள் காயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் துணை ராணுவ நிலை மீது தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 காவலர்கள் காயமடைந்ததாக ... மேலும் பார்க்க