செய்திகள் :

Doctor Vikatan: குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் - வீட்டு வைத்தியங்களைச் செய்யலாமா?

post image

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் காய்ச்சலுக்கு உடனடி சிகிச்சை தேவையா, அல்லது வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் தொந்தரவுகள் ஏற்படுவது என்பது இயல்பானதுதான். ஆனால், இவற்றின் பாதிப்பு எப்படி உள்ளது என்பதைப் பொறுத்தே உங்களுக்கான பதிலைச் சொல்ல முடியும்.

குழந்தைகளுக்கு வெறும் சளி மட்டுமே பிடித்திருக்கும் பட்சத்தில், நீராவி பிடிக்கச் செய்வது போன்ற எளிய கைவைத்தியங்களைப் பின்பற்றலாம். 

ஆனால், காய்ச்சலோடு சேர்ந்து சளியும் இருக்கிறது என்றால், அது வைரஸ் தொற்று அல்லது பாக்டீரியா தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். 

காய்ச்சல் வந்துவிட்டாலே, அது தொற்றுக்கான அறிகுறி என்று அர்த்தம். காய்ச்சல் இருக்கும்போது மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது, அதுதான் பாதுகாப்பானதும்கூட.

குழந்தையின் வயதுக்கேற்ப இந்த அறிவுரை மாறும். உதாரணத்துக்கு, 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சளி பிடித்தால், ஒன்றிரண்டு நாள்களில் தானாகச் சரியாகிறதா என காத்திருந்து பார்த்துவிட்டு, பிறகு மருத்துவ ஆலோசனை பெறலாம்.

அதுவே, பிறந்தது முதல் 9 மாதங்கள் வரையிலான குழந்தைக்கு சளி பிடித்தால் உடனே மருத்துவரிடம் காட்டுவதுதான் சரியானது.

குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல்

தானாகச் சரியாகிவிடும் என அலட்சியம் செய்தால், அது வீஸிங் எனப்படும் மூச்சுத்திணறலாக மாறவும் வாய்ப்பு உண்டு.  அப்படி அலட்சியம் செய்தால் சில குழந்தைகளுக்கு  வைரல் பிராங்கியாலிட்டிஸ் (viral bronchiolitis) எனும் பாதிப்பாக மாறும் அபாயம் உண்டு.

அதாவது சுவாசக் குழாய் சுருங்கி, ஆக்ஸிஜன் அளவு குறையவும் வாய்ப்பு உண்டு. அதுபோன்ற நிலைகளில் குழந்தைகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

இன்னும் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் காரணமாக ஃபிட்ஸ் வரவும் வாய்ப்பு உண்டு. எனவே, எப்படிப்பட்ட சளி, காய்ச்சல் என்பதைப் பொறுத்தே சிகிச்சை தீர்மானிக்கப்படும்.

நம்மூரில், லேசாக மூக்கில் நீர் வடிந்தாலும் சளி என்பார்கள், இருமலையும் சளி என்பார்கள். காதில் நீர் வடிந்தாலும் சளி என்பார்கள். எதையும் ஆரம்பத்தில் அலட்சியம் செய்துவிட்டு, அது முற்றிய பிறகு டாக்டரை நாடுவதற்கு பதில், ஆரம்பத்திலேயே பார்த்துவிடுவதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

பூச்சிக் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? - அவசர கால மருத்துவர் ஆலோசனை

வெயிலும் மழையும் மாறி மாறி வரும் சீசனில் பாம்புக்கடிகளைப் போலவே பூச்சிக்கடிகளும் அதிகரித்து விட்டது. இதனால் சிலர் மரணமும் அடைந்திருக்கிறார்கள். சென்னை, ஆவடி, கண்ணப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்த 19 வயத... மேலும் பார்க்க

Cervical Spondylosis: யாருக்கெல்லாம் வரலாம்; அறிகுறிகளும் தீர்வுகளும்!

கழுத்தின் மூட்டுப் பகுதி மற்றும் பின்முதுகுவரை பாதிக்கும் `செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் பிரச்னை, வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இது குறித்து, எலும்பு மூட்டு மருத்துவர் நாவலடி சங்க... மேலும் பார்க்க

Soda: செரிமானத்துக்கு உதவுமா; வயிறு உப்புசத்தை சரியாக்குமா சோடா?

பல வீடுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் வாங்கிய கையோடு, காற்றடைத்த குளிர்பானங்களையும் வாங்கி வந்து ஃபிரிட்ஜில் வைப்பார்கள். மதியம் வயிறு புடைக்க சாப்பிட்டு முடித்தவுடன், குழந்தைகளில் ஆரம்பித்து பெரிய... மேலும் பார்க்க

Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முடி உதிர்வைக் கட்டுப்படுத்துமா, எந்த எண்ணெய் உகந்தது?

Doctor Vikatan: இந்தத் தலைமுறை பிள்ளைகள் பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விரும்புவதே இல்லை. எண்ணெய்க் குளியல் உண்மையிலேயே அவசியம்தானா, என் 17 வயது மகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. எண்ணெய்... மேலும் பார்க்க

Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார்க்க வேண்டுமா?

Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 65 வயதாகிறது. அவருக்கு லேசான காய்ச்சல் அடித்தாலேஉடனே பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. மருத்துவரைப் பார்க்கலாம் என்று சொன்னால் கேட்க மாட... மேலும் பார்க்க

Doctor Vikatan: சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிற்று எரிச்சல் ஏற்படுவதுஏன்?

Doctor Vikatan:சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிறு எரிவது போன்று உணர்வது ஏன், சாப்பாட்டுக்கு முன் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை சாப்பிட்ட பிறகோ, சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டியதை சாப்பாட்டுக்கு முன்ப... மேலும் பார்க்க