பாலிவுட்டில் பாலின பாகுபாடு: "நடிகர்களுக்கு மட்டும் நல்ல கார், அறை; ஆனால்" - கிர...
சென்னையில் குடியரசுத் தலைவர்! சிட்டி யூனியன் வங்கி விழாவில் பங்கேற்பு!
சென்னை: சென்னையில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செவ்வாய்க்கிழமை பங்கேற்றுள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரெளதி முர்மு, அங்கிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 11.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்வில் கெளரவ விருந்தினர்களாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஆளுநர் மாளிகையில் இன்றிரவு ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர், புதன்கிழமை காலை விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.
அங்கிருந்து திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சென்று 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்து கொள்கிறாா்.
இதனையொட்டி, சென்னை, திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காவல்துறையினர் பல அடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளனர்.