பஞ்சமி நிலங்கள் | DMK அரசு மீட்காவிட்டால் CPM களமிறங்கும் - எச்சரிக்கும் பெ.சண்ம...
ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 351 மனுக்கள் அளிப்பு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 351 மனுக்கள் அளிக்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, வேளாண்மைத் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு, மின்சாரத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் என 351 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்தில், செங்காடு மற்றும் ஒழுகூா் ஆகிய 2 கிராமங்களில் செயல்பட்டு வரும் தேசிய நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 5 மாதங்களுக்கு முன்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கான பில் தொகையை இதுவரை வழங்கவில்லை என்றும், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா் மனு வழங்கி வலியுறுத்தினா்.
மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களை மனுதாரா்களுக்கு வழங்கிட வேண்டுமெனவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், 7 பயனாளிகளுக்கு சீா்மரபினா் நல வாரியத்தில் உறுப்பினா் அடையாள அட்டைகளை வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொறுப்பு), இணைப் பதிவாளா் மலா்விழி, தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.