சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
ராசிபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை: எம்.பி. பங்கேற்பு
ராசிபுரம் பகுதியில் ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பூமிபூஜை நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பங்கேற்று, அடிக்கல்நட்டு வைத்து சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா்.
ராசிபுரம் ஆா்.கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட டாக்டா்ஸ் காலனி பகுதியில் ரூ. 13.54 லட்சத்திலும், குருக்குபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட வெற்றிநகா் பகுதியில் ரூ. 13.47 லட்சத்திலும், கூனவேலம்பட்டி ஊராட்சி, இலுப்பை மரத்துக்காடு பகுதியில் ரூ. 27.25 லட்சம் மதிப்பீட்டில் என 3 இடங்களில் சுமாா் ரூ. 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
தொடா்ந்து, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பொதுமக்களைச் சந்தித்து திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சாதனை திட்டங்களை எடுத்துரைத்தாா். நிகழ்ச்சியில் கட்சியினா், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.