செய்திகள் :

பிக் பாஸ் பிரபலங்களுக்கு விரைவில் திருமணம்!

post image

பிக் பாஸ் பிரபலங்களான அர்ச்சனா - அருண் பிரசாத் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

நிச்சயதார்த்த நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அர்ச்சனா தனது ரசிகர்களுக்காக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ள ஜோடிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன். ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்தாலும், பின்னர் மக்களின் ஆதரவுடன் பிக் பாஸ் சீசன் 7 வெற்றியாளராக வாகை சூடினார்.

அடுத்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் சின்ன திரை நடிகர் அருண் பிரசாத் போட்டியாளராகப் பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பே அர்ச்சனாவும் அருண் பிரசாத்தும் காதலித்து வந்துள்ளனர்.

இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து புகழ் பெற்ற நிலையில், இவர்களின் காதல் பிக் பாஸ் வீட்டில்தான் பலருக்கும் தெரியவந்தது.

Archana Ravichandran arun prasath engaged
பிக் பாஸ் வீட்டில்...

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, அருண் தனது காதலியான அர்ச்சனாவுக்கு பிறந்தநாளன்று நள்ளிரவு கேமராவைப் பார்த்து வாழ்த்து கூறினார். அப்போது தனது காதலையும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. இந்த விடியோவைக் குறிப்பிட்டு அர்ச்சனாவும் காதலை ஏற்பதைப் போன்று பதிவிட்டிருந்தார்.

திரைப் பிரபலங்கள் இருவர் தங்கள் காதலை பொது வெளியில் வெளிப்படுத்திக்கொண்ட இந்த சம்பவம் பெரிதும் பேசப்பட்டது.

இந்த நிலையில், இருவரும் தங்கள் குடும்பத்தின் ஒப்புதலுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிச்சயதார்த்தத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் பலர் திருமண வாழ்வில் இணையவுள்ள ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க |ஆஹா கல்யாணம் நடிகைக்கு விரைவில் கல்யாணம்! காதலரைக் கரம்பிடிக்கிறார்!

Bigg boss fame Archana Ravichandran arun prasath engaged

கட்டா குஸ்தி 2 அறிவிப்பு விடியோ!

நடிகர் விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி 2 படத்தின் அறிவிப்பு விடியோவை வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தை இயக்கிய செல்லா அய்யாவு இந்தப் படத்தை இயக்குகிறார். நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் கடந... மேலும் பார்க்க

ஈரானிடம் தோற்ற இந்திய அணி! இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்ததா?

காஃபா நேஷன்ஸ் போட்டியில் இந்திய அணி 0-3 என மோசமாக தோற்றது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி நடப்பு சாம்பியனான ஈரானிடம் தோல்வியடைந்தது.மத்திய ஆசிய கால்பந்து அமைப்பு நடத்தும் காஃபா நேஷன்ஸ் கோப்பையில் இ... மேலும் பார்க்க

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி 11 மாத காயத்துக்குப் பிறகு அணியில் இணைந்துள்ளார். கடந்த முறை பேலந்தோர் விருது வென்ற ரோட்ரி தான் ஒன்றும் மெஸ்ஸி கிடையாது எனக் கூறியது கவனம் ஈர்த்துள்ளது. கடந்த சீசனில் ப... மேலும் பார்க்க

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி பாடல்!

பைசன் காளமாடன் படத்தின் முதல் பாடலான தீக்கொழுத்தி வெளியாகியுள்ளது. நிவாஸ் கே. பிரசன்னா இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் கவனம் ஈர்த்து வருகிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடி... மேலும் பார்க்க

நடிகையிடம் தவறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்ட போஜ்புரி நடிகர்!

நடிகை அஞ்சலி ராகவிடம் தவறாக நடந்துகொண்டதற்கு நடிகர் பவன் சிங் மன்னிப்பு கேட்டார். நடிகை அஞ்சலி ராகவ் தனது சமூக வலைதளத்தில் மிகவும் வேதனையுடன் விடியோ வெளியிட்டதற்காக நடிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். போஜ்... மேலும் பார்க்க

27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ராம் கோபால் வர்மா - மனோஜ் பாஜ்பாயி!

இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மனோஜ் பாஜ்பாயி உடன் ராம் கோபால் வர்மா இணைந்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா ... மேலும் பார்க்க