செய்திகள் :

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

post image

‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான பெரியளவிலான ஆதாரங்களை பொதுவெளியில் கொண்டு சேர்ப்போம் என்றும், அதன் எதிரொலியாக, பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தமது முகத்தைக்கூட காட்டத் தயங்கும் அளவுக்கு கடும் பின்விளைவுகள் ஏற்படுமென்றும் ராகுல் காந்தி பேசினார்.

பிகாரில் 110 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் உள்ளடக்கி மொத்தம் 1,300 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற ராகுல் காந்தி தலைமையிலான வாக்குரிமைப் பேரணியின் இறுதி நாளில் இன்று (செப். 1), ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அண்டை மாநிலமான ஜார்க்கண்ட்டின் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஐ (எம் எல்) விடுதலை பொதுச்செயலர் தீபங்கர் பட்டாச்சார்யா, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் எம். ஏ. பேபி, கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னி ராஜா, திரிணமூல் காங்கிரஸின் எம்.பி. யூசுஃப் பதான், சிவசேனை (உத்தவ் தாக்கரே அணி) சஞ்சய் ராவத் மற்றும் ’இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த பிற முக்கிய தலைவர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இன்றுடன் (செப். 1) முடிவடைந்த ‘வாக்குரிமைப் பேரணியில்’ பேசிய ராகுல் காந்தி, “அரசமைப்பை கொல்ல அவர்களை(பாஜக) நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதற்காகவே இந்த பேரணி நடத்தப்பட்டது.

இதற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரண்டு ஆதரவளித்துள்ளனர். பிகார் ஒரு புரட்சிகர மாநிலம். நாட்டுக்கு ஒரு செய்தியை கொண்டு சேர்க்கிறது பிகார்.

பாஜகவைச் சேர்ந்த மக்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அணு குண்டை விடப் பெரிதாக ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? - அதுதான் ஹைட்ரஜன் குண்டு!

ஆகவே, பாஜகவைச் சேர்ந்த மக்களே தயாராக இருங்கள், ஹைட்ரஜன் குண்டு வந்துகொண்டேயிருக்கிறது.

வாக்குத் திருட்டில் நடைபெற்ற உண்மைகளை மக்கள் விரைவில் அறிந்துகொள்ளவிருக்கிறார்கள்.

வரும் காலங்களில், அந்த ஹைட்ரஜன் குண்டு வந்திறங்கியவுடன், நரேந்திர மோடியால் தமது முகத்தை நாட்டு மக்களிடம் காட்ட இயலாது.

பிகார் இளைஞர்களே! வாக்குத் திருட்டு என்பது ‘உரிமை திருட்டு, ஜனநாயக திருட்டு, வேலைவாய்ப்பு திருட்டு’ ஆகியவற்றைக் குறிக்கும். அவர்கள் உங்கள் ரேசன் அட்டையையும் இதர உரிமைகளையும் பறித்துக்கொள்வர்” என்றார்.

‘Hydrogen bomb’ of revelations on ‘vote chori’ coming, Modi will not be able to show his face, says Rahul Gandhi

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்தாக முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி. ச... மேலும் பார்க்க

டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. பிரதமரின் பேச்சுவார்த்தை சீனாவுக்கு கட்டுப்பட்டு நடப்பதைப்போன்று கோழைத்தனமாக இருந்ததாகவும், டி... மேலும் பார்க்க

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பல் தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிரத்தில் குன்பி பிரிவில் மராத்தா சமூகத்தினரை சோ்த்து ... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண் போலீஸ்! திடீரென வீட்டுக்குள் நுழைந்த கணவன்! அப்புறமென்ன..?

உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் அருகே காவல் துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வரும் காவலர் ஒருவர், தனது மனைவி வேறொரு ஆணுடன் வீட்டில் தங்கியிருப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் அவர்கள் இருவரையும் அடித்து தாக... மேலும் பார்க்க

ஷார்ஜாவில் கணவரின் சித்திரவதை தாங்காமல் கேரள இளம்பெண் மரணம்? விடியோ வெளியாகி பரபரப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜாவில் உயிரிழந்த கேரள இளம்பெண் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அதனை தாங்கிக் கொள்ள முடியாமலே உயிரிழந்தார் என்பதற்கு வலுசேர்க்கும் விதத்தில் தற்போது விடியோ ஆதாரம் வெளியாகி ப... மேலும் பார்க்க

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி: ரூ.1.86 லட்சம் கோடி வசூல்!

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.86 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017... மேலும் பார்க்க