செய்திகள் :

பிராமணர்களா, பெரும் பணக்காரர்களா? யாரைச் சொன்னார் நவரோ?

post image

இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுவது பிராமணர்களா? பெரும் பணக்காரர்களா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வணிக ஆலோசகர் பீட்டர் நவரோ இரண்டாவது முறையாக இந்தியாவைக் குற்றஞ்சாட்டித் திங்கள்கிழமை தெரிவித்த ஒரு கருத்தானது செய்தி ஊடகங்களில் விரைந்து பரவிக்கொண்டிருக்கிறது.

New Delhi, a laundromat for the Kremlin - இந்தியாவை ரஷியாவின் சலவைக்கூடம்  என்றும்  Brahmins of profiteering at the expense of the Indian people - இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள்லாபம் ஈட்டுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் நவரோ.

எதற்காக பிராமின்ஸ் என்று குறிப்பிடுகிறார், யாரைக் குறிப்பிடுகிறார் என்று கொஞ்சம் சந்தேகப்பட்டுத் துழாவும்போதுதான், இந்தச் சொல் உள்ளபடியே பிராமணர்களைக் குறிப்பிடவில்லை. பெரும் பணக்காரர்களைத்தான் குறிப்பிடுகிறது என்பது தெரிய வந்தது. இந்தியா தொடர்புடைய கருத்து என்பதால் பலரும் பிராமணர்கள் என்பதாகவே புரிந்துகொண்டுவிட்டனர்.

ரஷியா – உக்ரைன் போரை ‘மோடியின் போர்’ என்று சில நாள்களுக்கு முன் கருத்துத் தெரிவித்துப் பரபரப்பாக்கியவர் பீட்டர் நவரோ. எனவே, இப்போதும் ‘பிராமணர்கள்’ என்ற இவருடைய கருத்தும் பரபரப்பானது.

இதனிடையே, பிராமின்ஸ் என்று நவரோ, குறிப்பிட்டது நேரடியாக பிராமணர்களை அல்ல; பெரும் பணக்காரர்களைத்தான். ஒருகாலத்தில் அமெரிக்க புதிய இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்களைக் குறிப்பிட பாஸ்டன் பிராமின் (Boston Brahmins – பாஸ்டன் என்பதொரு நகர்)என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் பேசுவோரிடையே இன்னமும் சமூக அல்லது பொருளாதார ரீதியில் ‘உயர்நிலை’யில் இருப்பவர்களைக் குறிப்பிட பிராமின் என்ற சொல்லைப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது என்று எக்ஸ் தளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சகரிகா கோஷ் பகிர்ந்தார். பின்னர், அதையே ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் பகிர்ந்தது.

ஆக, இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுவதாக நவரோ குறிப்பிட்டது பெரும் பணக்காரர்களைத்தான்.

மொழிபெயர்ப்பில், ஒரு சொல்லையும் அதற்கான பொருளையும் தெரிந்து வைத்திருப்பது மட்டுமே போதுமானதல்ல; அந்தச் சொல் எந்தெந்த நாட்டில் என்னென்ன பொருள்களில் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியிருக்கிறது.

நவரோ சொன்ன பிராமின் என்ற சொல்லும் பொருளும் பற்றி, எக்ஸ் தளத்தில் பெரும் விவாதங்களே நடந்துகொண்டிருக்கின்றன.

இப்படியொரு விளக்கத்தை எதற்காக சகரிகா கோஷ் கூற முன்வருகிறார், நவரோ சொன்னாரா? என்றெல்லாம் அவரையும் சிலர் விமர்சிக்கின்றனர்.

ஆப்பிரிக்க அமெரிக்கர்களைக் குறிப்பிட ஒருகாலத்தில் நீ_ரோ என்ற சொல்லும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போதும் ஆங்கிலத்தில் சிலர் ஆப்பிரிக்கர்களைக் குறிப்பிட நீ_ரோக்கள் என்று கூறுகிறார்கள். அரை நூற்றாண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டது என்பதற்காக இப்போதும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

செய்யறிவும் என்னவோ பெரும் பணக்காரர்களைத்தான் சுட்டுகிறது. ஆனாலும், சமூக ஊடகங்களில் இன்னமும் பீட்டர் நவரோ யாரைச் சொல்கிறார்? என்று அவரவர் சிந்தனைப் போக்கிற்கேற்பத் தொடர்ந்து விவாதித்துக் கொண்டே இருக்கின்றனர்.

On the meaning of the word Brahmin, as mentioned by President Trump's advisor Peter Navarro...

இதையும் படிக்க : இந்திய மக்களின் இழப்பில் பெரும் பணக்காரர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்! டிரம்ப் ஆலோசகர் புது குற்றச்சாட்டு!

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...? -மு. தமிமுன் அன்சாரி

மு. தமிமுன் அன்சாரி தமிழ்நாட்டில் திரையுலகமும், அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடா்போடு பயணித்து வருகிறது. தலைவா்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயம் தானா என்ற கேள்வி எதிரொலித்தாலும், ... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

இளம் பெண்களை வைத்து வாடிக்கையாளர்களைப் பெருக்கும் நோக்கில் சில ஆடம்பர கேலிக்கை விடுதிகள் மற்றும் உணவகங்கள் புதிய மோசடி முறையைக் கையிலெடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.மும்பை போன்ற ப... மேலும் பார்க்க

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

விஜய்தான் முதல்வா் வேட்பாளா் என்று அவருடைய கட்சி அறிவித்திருக்கிறது! பிழை ஒன்றுமில்லை!. முதல்வா் மு.க.ஸ்டாலினால் முடிந்த எதுவும் விஜயால் முடியாது என்று யாரும் கூறமாட்டாா்கள். அதனால், அத்தகைய விருப்பம்... மேலும் பார்க்க

மின் இணைப்புகள் ஒன்றிணைப்பு: பயனீட்டாளா்கள் அலைக்கழிப்பு!

நமது நிருபா் திண்டுக்கல்: குடியிருப்புக் கட்டடங்களுக்கு பெறப்பட்ட இரு வேறு மின் இணைப்புகளை மின் வாரிய அலுவலா்கள் ஒன்றிணைத்ததை மீண்டும் மாற்ற முடியாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் மின் பயனீட்டாளா்கள் அலைக... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு! அதிசயமே அசந்துபோகும் அதிசயங்கள்!

தேர்தல் ஆணையத்தின் மோசடிகளும் முறைகேடுகளும் நடைபெறுவதாக நாட்டின் எதிர்க்கட்சித் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.குற்றச்சாட்டுகளுக்குச் சான்றாக பெங்க... மேலும் பார்க்க

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் 5.333 பில்லியன் டாலர் (ரூ.46,718 கோடி) மதிப்புள்ள ஆடைகள் ஏற்றுமதியாகி வரும் நிலையில், டிரம்ப் அறிவித்த புதிய விரி விதிப்பால், ஆடைத் தயாரிப்புத் துறையில் 2... மேலும் பார்க்க