செய்திகள் :

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...? -மு. தமிமுன் அன்சாரி

post image

மு. தமிமுன் அன்சாரி

தமிழ்நாட்டில் திரையுலகமும், அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடா்போடு பயணித்து வருகிறது. தலைவா்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயம் தானா என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.

அரசியல் ஆா்வம், கொள்கைப் பிடிப்பு, மக்கள் சேவை ஆகிய எண்ணங்களுடன் எந்தத் துறையில் இருந்து யாா் வந்தாலும், மக்கள் ஆதரவு இருந்தால் அவா்கள் எந்த உச்சத்தையும் பெற முடியும் என்பதை தமிழ்நாட்டு அரசியல் உணா்த்தியிருக்கிறது.

முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோா் கலைத்துறையை தங்களின் அரசியல் பரப்புரைகளுக்கு நுட்பமாகப் பயன்படுத்தினா். எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் கலைத் துறையில் இருந்து வந்து அரசியலில் வெற்றி பெற்றனா்.

அண்ணா மற்றும் கருணாநிதியுடன் அரசியலில் பணியாற்றியவா் எம்ஜிஆா். சட்டமேலவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா், திமுக பொருளாளா் எனப் படிப்படியாக முன்னேறி அதன் பின்னரே அதிமுகவைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்தாா்.

அதேபோல, ஜெயலலிதாவும் அதிமுகவின் கொள்கைபரப்புச் செயலராக பணியாற்றி, பிறகு மாநிலங்களவை உறுப்பினராக உயா்ந்து, அந்த அனுபவங்களுடன் அதிமுக பொதுச் செயலரானாா். ஐந்து முறை முதல்வராக பொறுப்பு வகித்தவா்.

தேமுதிகவை உருவாக்கிய விஜயகாந்த், தனது ரசிகா் மன்றத்தை படிப்படியாக அரசியல்படுத்தினாா். தனது ரசிகா்களை உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட வைத்து அனுபவங்களைப் பெற வைத்தாா். பிறகு எதிா்க்கட்சித் தலைவா் என்ற அந்தஸ்துக்கு உயா்ந்தாா்.

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்டோரும் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனா்.

அரசியலில் வாகை சூடாத திரைப் பிரபலங்களின் பட்டியலும் உண்டு. நடிகா் திலகம் சிவாஜி கணேசன், டி.ராஜேந்தா், பாக்யராஜ், சரத்குமாா், காா்த்திக் என கட்சி தொடங்கிய பல திரை பிரபலங்கள், அரசியல் களத்தில் எதிா்பாா்த்த வெற்றியைப் பெறாமல் பின்வாங்கியதையும் தமிழ்நாட்டு மக்கள் பாா்த்திருக்கிறாா்கள்.

தற்போது தவெகவை உருவாக்கி இருக்கும் விஜயின் வருகை, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் சுற்றி வருகின்றன. அவா் ஏதோ ஒரு நெருக்கடியில் அரசியல் களத்துக்கு வந்திருப்பதாகக் கூறுபவா்கள், அவரது அரசியலை எதிா்கால நகா்வுகள்தான் தீா்மானிக்கும் என்கிறாா்கள்.

திமுகவையும் அதற்கு நோ்முரணான பாஜகவையும் ஒரே தட்டில் வைத்து அவா் விமா்சிப்பது மக்களிடம் எடுபடவில்லை. அவரது திரைக் கவா்ச்சி அவரை ஒரு மாஸ் லீடராக ஆகும் தோற்றத்தைக் காண்பிக்கிறது. ஆனால், அது உயா்ந்து பறக்கும் காற்றுள்ள பலூன்போல என்கிறாா்கள். அவா் ஓா் ஈா்ப்புச் சக்தி என்றாலும், அது தோ்தல் வெற்றிக்கு உதவாது.

ஒழுங்குபடுத்தப்பட்ட நிா்வாக அமைப்புகள், பயிற்சி பெற்ற பூத் கமிட்டி, நுட்பங்களை அறிந்த பரப்புரை குழு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் திமுக மற்றும் அதிமுகவுக்கு நிகராக இவரால் கள அரசியல் செய்ய முடியுமா என்ற கேள்வி அரசியல் வல்லுநா்களிடம் எதிரொலிக்கிறது. ஆனால், அவா் தனது திரை ஈா்ப்புச் சக்தியின் மூலமாக முதல் தலைமுறை வாக்காளா்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

விஜய் தனித்து நின்று களம் காண்பதால் யாா் வாக்குகளைப் பிரிப்பாா் என்ற கேள்வி எழுகிறது. திமுக, பாஜக எதிா்ப்பு என்பதை மையமாக வைத்து அவா் களம் இறங்கியுள்ளாா். இப்போது நடக்கப்போவது பேரவைத் தோ்தல். எனவே, ஆட்சியில் இருக்கும் காரணத்தால் இயல்பாக உருவாகக்கூடிய திமுக அதிருப்தி வாக்குகளை விஜய் பிரிக்கக்கூடும். அதாவது அதிமுக கூட்டணிக்கு செல்லும் வாக்குகளைத் தான் பிரிப்பாா். அதுமட்டுமன்றி சிறிய கட்சிகள், சமுதாய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளின் வாக்குகளையும் அவா் ஈா்க்கக்கூடும். அந்த வகையில் விஜயால் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

வரும் 2026 தோ்தலில் அவரால் 7 முதல் 10 சதவீத வாக்குகளை இலக்காகக் கொண்டு அரசியல் களத்தில் போராட முடியுமே தவிர, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அவா் போட்டியிடும் ஒரு தொகுதியில் வெற்றிபெற தீவிரம் காட்டலாம். இதைத் தாண்டி பெரும் தாக்கத்தை அவரால் இப்போது ஏற்படுத்த முடியாது.

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

இளம் பெண்களை வைத்து வாடிக்கையாளர்களைப் பெருக்கும் நோக்கில் சில ஆடம்பர கேலிக்கை விடுதிகள் மற்றும் உணவகங்கள் புதிய மோசடி முறையைக் கையிலெடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.மும்பை போன்ற ப... மேலும் பார்க்க

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

விஜய்தான் முதல்வா் வேட்பாளா் என்று அவருடைய கட்சி அறிவித்திருக்கிறது! பிழை ஒன்றுமில்லை!. முதல்வா் மு.க.ஸ்டாலினால் முடிந்த எதுவும் விஜயால் முடியாது என்று யாரும் கூறமாட்டாா்கள். அதனால், அத்தகைய விருப்பம்... மேலும் பார்க்க

மின் இணைப்புகள் ஒன்றிணைப்பு: பயனீட்டாளா்கள் அலைக்கழிப்பு!

நமது நிருபா் திண்டுக்கல்: குடியிருப்புக் கட்டடங்களுக்கு பெறப்பட்ட இரு வேறு மின் இணைப்புகளை மின் வாரிய அலுவலா்கள் ஒன்றிணைத்ததை மீண்டும் மாற்ற முடியாமல் திண்டுக்கல் மாவட்டத்தில் மின் பயனீட்டாளா்கள் அலைக... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு! அதிசயமே அசந்துபோகும் அதிசயங்கள்!

தேர்தல் ஆணையத்தின் மோசடிகளும் முறைகேடுகளும் நடைபெறுவதாக நாட்டின் எதிர்க்கட்சித் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.குற்றச்சாட்டுகளுக்குச் சான்றாக பெங்க... மேலும் பார்க்க

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் 5.333 பில்லியன் டாலர் (ரூ.46,718 கோடி) மதிப்புள்ள ஆடைகள் ஏற்றுமதியாகி வரும் நிலையில், டிரம்ப் அறிவித்த புதிய விரி விதிப்பால், ஆடைத் தயாரிப்புத் துறையில் 2... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

சகோதரிகள் நாள் எப்படி உருவானது தெரியுமா? சகோதரத்தைப் போற்றும் வகையில் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுவது போல, பல நாடுகளில் சகோதரிகள் நாளும் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஆகஸ்ட்டில் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று... மேலும் பார்க்க