TNPSC தேர்வில் அவமதிக்கும் வகையில் கேள்வி; கொதிக்கும் அய்யா வைகுண்டர் பக்தர்கள்;...
விஜய்யுடன் கூட்டணியா? - ஓபிஎஸ் பதில்
2026 தேர்தலில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,
"விஜய் தற்போதுதான் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். தேர்தலில் நின்று வென்று இலக்கை எப்படி அடைகிறார், எவ்வாறு செயல்படுகிறார் என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.
இதுவரை யாரும் என்னுடன் கூட்டணிக்காக பேசவில்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானால் நடக்கலாம்" என்று தெரிவித்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியது பற்றி, பிரேமலதா கூறியதிலேயே பதிலும் இருக்கிறது என்று கூறினார்.