`விவசாயிகளை பாதிக்கும் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காது'- அமைச்சர் கே.கே.எஸ்.எ...
நெல்லை: தாயை அடித்துக் கொன்ற மகன்; திருமணம் மீறிய உறவால் நிகழ்ந்த கொடூரம்
நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள எடுப்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெஜினா. இவரது கணவர் பூல்பாண்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் ரெஜினா, தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், ரெஜினாவிற்கும் பக்கத்து வீட்டு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதையறிந்த ரெஜினாவின் மூத்த மகனான கொம்பையா தனது தாயையும் அந்த வாலிபரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் தகாத உறவைக் கைவிடவில்லை. இரண்டு மகன்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் ரெஜினா அந்த வாலிபருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.
இதனால் ரெஜினாவிற்கும் மகன்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே நேற்று இரவில் ரெஜினாவும் பக்கத்து வீட்டு வாலிபரும் நெருக்கமாக இருந்துள்ளனர். திடீரென கண் விழித்த கொம்பையா, இதனைப் பார்த்து ஆத்திரத்தில் இருவரையும் தாக்கியுள்ளார். அந்த வாலிபர் தப்பி ஓடவே இரும்புக் கம்பியால் தாய் ரெஜினாவைத் தாக்கியுள்ளார்.

பின்னர் ரெஜினாவின் கழுத்தைப் பிடித்து நெரிக்கவே அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். பின்னர் கொம்பையா தாய் ரெஜினாவின் உடலை வீட்டின் அருகில் உள்ள கோயில் அருகில் வீசிவிட்டு அங்கிருந்த தப்பியோடிவிட்டார்.
இன்று காலையில் அவ்வழியே சென்றவர்கள் மூலக்கரைப்பட்டி போலீஸாருக்குத் தகவல் கூறியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கொம்பையாவைத் தேடி வருகின்றனர்.