டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்
பைக் மீது மணல் லாரி மோதல்: மூதாட்டி உள்பட இருவர் பலி
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்னால் சென்ற பைக் மீது மணல் லாரி மோதியதில் பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற மூதாட்டி உள்பட இருவர் உயிரிழந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன் பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல்(58). பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்து வந்தார். பிற்பகல் 12 மணிக்கு மேல் சக்திவேல் பைக்கில் சிவகாசி சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சீனியம்மாள்(65) என்ற மூதாட்டி சக்திவேல் பைக்கில் லிப்ட் கேட்டு சென்றார். மாயத்தவேன்பட்டியில் இருந்து சிவகாசி - ஶ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலைக்கு செல்லும் வழியில் தனியார் குவாரியில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு எம்.சான்ட் ஏற்றிச் சென்ற லாரி முன்னால் சென்ற பைக் மீது மோதியது.
இதில் சாலையில் விழுந்த சக்திவேல், சீனியம்மாள் மீது லாரி ஏறியகியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரியை ஒட்டி வந்த மாரனேரியை சேர்ந்த முத்துவைரம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.