டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்
புதிய தொடரில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா!
சின்னஞ்சிறு கிளியே என்ற தொடரில் நடிகை சுஜிதா நடிக்கவுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த சுஜிதா, இதன்மூலம் மீண்டும் சின்ன திரையில் நடிக்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் நடிகை சுஜிதா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், நிரோஷா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திற்குப் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கெளரி தொடரில் சிறப்புத் தோற்றத்தில் சுஜிதா நடித்தார். எனினும், அதிலும் தொடர்ச்சியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இதனிடையே தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சின்னஞ்சிறு கிளியே தொடரில் நடிகை சுஜிதா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனது உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் சுஜிதாவை மீண்டும் சின்ன திரையில் காண அவரின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போது திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்த சுஜிதா, தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற தொடர் மூலம் சின்ன திரையில் நுழைந்தார். தொடர்ந்து, கங்கா யமுனா சரஸ்வதி, கணவருக்காக, மருதாணி, பைரவி, உள்ளிட்டத் தொடர்களில் நடித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த சுஜிதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்காக விஜய் டிவி வழங்கிய விருதை இரு முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளராகிறார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை?