செய்திகள் :

School Fees: "1-ம் வகுப்புக்கு ரூ. 8 லட்சம்" - வைரலான பள்ளிக் கட்டணம்; நிதி ஆலோசகர் சொல்வது என்ன?

post image

பெங்களூருவில் உள்ள ஒரு பிரபலமான தனியார்ப் பள்ளியின் கல்விக் கட்டணம் (fee structure) அடங்கிய ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

'எக்ஸ்' தளத்தில் பகிரப்பட்ட பதிவில், வெறும் பள்ளிக்கான கட்டணம் மட்டும் அதில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதன்படி 1-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 7.35 லட்சம், 11-12-ம் வகுப்புகளுக்கு ரூ. 11 லட்சம் வரை கட்டணம் பெறப்படுகிறது.

போக்குவரத்து, புத்தகங்கள், சீருடைகள் அல்லது extracurricular activities போன்ற கூடுதல் செலவுகளையும் அதில் சேர்த்தல் ஒரு குழந்தைக்கான ஆண்டுச் செலவு ரூ. 8 லட்சத்தைத் தாண்டுகிறது.

ஆலோசகர் டி.முத்துகிருஷ்ணன்
ஆலோசகர் டி.முத்துகிருஷ்ணன்

அந்தக் குறிப்பிட்ட தனியார்ப் பள்ளியின் ஸ்கிரீன் ஷாட்டை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நிதி ஆலோசகர் டி.முத்துகிருஷ்ணன், ``இது ஒரு திறந்த சந்தை (free market). விலை நிர்ணயம் செய்வது தனிநபர்களின் கையில் இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்வது அவர்களின் விருப்பம். பெரும்பாலான கோட்பாடுகளைப் போலவே, இந்தக் கோட்பாட்டிலும் எல்லாம் சரியாகவே உள்ளது.

பெங்களூருவில் உள்ள ஒரு நல்ல பள்ளியின் கட்டண அமைப்பைப் பாருங்கள்.

ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் வருமானம் ஈட்டும் ஒரு ஐடி தம்பதியால் கூட, இரண்டு குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால், இந்தக் கட்டணத்தைச் சமாளிக்க முடியாது. இந்தியா முரண்பாடுகளின் நாடு" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சமுக ஊடகப் பயனர் ஒருவர், ``ஐடி ஊழியர்களுக்கு 50 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது. ஆசிரியர்களுக்கும் பள்ளியின் பிற ஊழியர்களுக்கும் இப்படி சம்பளம் வழங்கப்படுகிறதா?

ஏன் அப்படி வழங்கப்படுவதில்லை? பெரும்பாலான பணம் நிர்வாகத்திற்கே செல்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு எல்லோரும் தனியார்ப் பள்ளிகளில் சேர்க்கையை நிறுத்திவிட்டு, தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பினால், தனியார்ப் பள்ளிகள் தானாகவே பேய் வீடுகளாகிவிடும்.

ஆனால் மக்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் மக்களே ஊழல் நிறைந்தவர்கள்தான்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பீகார்: காதலி பேசாததால் கிராமத்துக்கே மின்சாரத்தை துண்டித்த இளைஞர்? - viral video-வின் பின்னணி என்ன?

காதலில் நாடகத்தன்மையான விஷயங்கள் நடப்பது சாதாரணமானதுதான். ஆனால் பீகாரில் காதலி தன்னிடம் பேசாததால் ஆத்திரமடைந்த இளைஞரின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. viral videoமின்சார கம்பத்தின் மேலேறிய இள... மேலும் பார்க்க

`We are engaged’ - புகைப்படத்தைப் பகிர்ந்து நிச்சயதார்தத்த்தை அறிவித்த பிக்பாஸ் செலிபிரட்டிஸ்

சின்னத்திரையில் வில்லி கதாப்பாத்திரத்தில் களமிறங்கி பிக்பாஸ் சீசன் 7-ன் டைட்டிலை வென்றவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் அருண் பிரசாந்த் பிக்பாஸ் சீசன்-8 ல் கல... மேலும் பார்க்க

பைக் பெட்டியை திறந்து ரூ.80,000 பணத்தை எடுத்த குரங்கு; மரத்தில் ஏறி செய்த வேலை!

பொதுவாக குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வந்த ஒருவரிடமிருந்து பணத்தை எடுத்த... மேலும் பார்க்க

Japan: பூஜி எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்? - அரசாங்கமே வெளியிட்ட AI வீடியோ - குழப்பத்தில் மக்கள்!

ஜப்பான் அரசாங்கம் அங்குள்ள மிக உயரமான மலையான பூஜி, எரிமலை வெடித்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் காட்டும் AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளது. "எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இது... மேலும் பார்க்க

``மாதத்தில் 15 நாள் கணவன், 15 நாள் காதலன்'' - பெண் போட்ட நிபந்தனை; பஞ்சாயத்தில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே கணவனை தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, ஊதா நிற டிரம்மில் அடைத்த மனைவியின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு ஆண்கள் உஷாரடைந்துள்ளனர். மனைவி ... மேலும் பார்க்க

Diamond Hunting: ஆந்திராவில் `வைர வேட்டை' - மழைக்காலங்களில் கிடைக்கும் வைரம்? -படையெடுக்கும் மக்கள்

ஆந்திராவின் வைரம் விளையும் மண்ணாக ராயலசீமா கருதப்படுகிறது. ராயலசீமா பகுதியில் பெய்து வரும் மழை, கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடும் பருவமாக மாறி... மேலும் பார்க்க