`விவசாயிகளை பாதிக்கும் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காது'- அமைச்சர் கே.கே.எஸ்.எ...
`We are engaged’ - புகைப்படத்தைப் பகிர்ந்து நிச்சயதார்தத்த்தை அறிவித்த பிக்பாஸ் செலிபிரட்டிஸ்
சின்னத்திரையில் வில்லி கதாப்பாத்திரத்தில் களமிறங்கி பிக்பாஸ் சீசன் 7-ன் டைட்டிலை வென்றவர் அர்ச்சனா ரவிச்சந்திரன்.
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் அருண் பிரசாந்த் பிக்பாஸ் சீசன்-8 ல் கலந்துகொண்டு இறுதி வரை தாக்குபிடித்தார்.
அருண் பிரசாத் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, அர்ச்சனாவுடன் காதலில் இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன. பிக்பாஸ் சீசன் 8-ன் குடும்ப சுற்று (Family round) நிகழ்ச்சியின் போது, அர்ச்சனா, வீட்டிற்குள் வந்து அருண் பிரசாத்துடன் இருந்த காதலை உறுதி செய்தார்.
இருவரும் பல ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து, அர்ச்சனாவின் பிறந்தநாளுக்கு பிக்பாஸ் வீட்டில் இருந்துகொண்டே அருண் பிரசாத் வாழ்த்துத் தெரிவித்தபோது, அர்ச்சனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதற்கு நன்றி தெரிவித்து, அவர்களின் உறவு குறித்த செய்தியை உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், இந்நிலையில் இருவரும் தற்போது நிச்சயம் முடிந்து விட்டதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர்.
அதில், நடிகர் அருண் தன் இன்ஸ்டாகிராம் பதிவில், ``இரண்டு ஆன்மாக்கள், ஒரே இதயம், முடிவில்லா அன்பு. என் நிரந்தரத்தைக் கண்டறிந்துவிட்டேன். இப்படியாக, நமது சாகசம் தொடங்குகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
விரைவில் இவர்களின் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சின்னத்திரையில் அடுத்த ரியல் செலிபிரிட்டி ஜோடியாக இவர்கள் மாறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...