Dhanush: வெள்ளை வேட்டி சட்டை; கழுத்தில் மாலை; ரசிகர்கள் சந்திப்பு நடத்திய நடிகர்...
அசத்தும் லோகா! ஹிருதயப்பூர்வம், ஓடும் குதிரை சாடும் குதிரை நிலவரம் என்ன?
ஓணம் வெளியீடாகத் திரைக்கு வந்த லோகா, ஹிருதயப்பூர்வம், ஓடும் குதிரை சாடும் குதிரை திரைப்படங்களின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவில் நீண்ட நாள்கள் கழித்து மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம், ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிரை சாடும் குதிரை, கல்யாணி பிரியதர்ஷனின் லோகா ஆகிய நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளன.
ஓணம் வெளியீடாகத் திரைக்குவந்த இப்படங்களில் துல்கர் சல்மான் தயாரிப்பில் சூப்பர்ஹீரோ கதையாக உருவான லோகா திரைப்படம் முதல் 4 நாள்களில் உலகளவில் ரூ. 25 கோடியையும் மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் ரூ. 8.5 கோடியையும் ஃபஹத்தின் ஓடும் குதிரை சாடும் குதிரை ரூ. 2.5 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், ஹிருதயப்பூர்வம் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் லோகாவுடான போட்டியில் வசூலில் திணறி வருகிறது.
அதேநேரம், மோசமான விமர்சனங்களைப் பெற்ற ஓடும் குதிரை சாடும் குதிரை திரைப்படம் வசூலில் தோல்விப்படமாகியுள்ளது.
எதிர்பாராத அளவிற்கு லோகாவுக்கு நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்து வருவதால் தமிழகத்திலும் இப்படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வார இறுதிக்குள் இப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்சார் சவால்கள்! படத் தயாரிப்பைக் கைவிடும் வெற்றி மாறன்!