தொடர்ச்சியாக மூன்றாவது கோப்பையை வென்ற ஓவல் அணி!
தி ஹன்ட்ரெட் தொடரை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஓவல் இன்வின்சிபிலஸ் அணி வென்று சாதனை படைத்துள்ளது.
சாம் பில்லிங்ஸ் தலைமையிலான ஓவல் அணி இறுதிப் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியை வீழ்த்தியது.
இங்கிலாந்தில் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் தி ஹன்ட்ரெட் எனும் பெயரில் 2021 முதல் நடைபெற்று வருகின்றன.
இந்த சீசனில் ஆரவர் தி ஹன்ட்ரெட் இறுதிப் போட்டியில் டேவிட் வில்லி தலைமையிலான டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியும் சாம் பில்லிங்ஸ் தலைமையிலான ஓவல் இன்வின்சிபிலஸ் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஓவல் அணி 100 பந்துகளில் 168/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 72, ஜோர்டான் காக்ஸ் 40 ரன்களும் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய டிரெண்ட் அணி 142/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 64 ரன்கள் எடுத்தார்.
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்தக் கோப்பையை ஓவல் அணி வென்று அசத்தியுள்ளது.