செய்திகள் :

`விவசாயிகளை பாதிக்கும் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காது'- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

post image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சேத்தூர் பேரூராட்சியில் 22 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் வாழ வந்தான் கண்மாய் அருகில் 12 ஆழ்துளை கிணறுகள் மற்றும் பிராகுடி ஆற்றுப் பாதையில் 12 ஆழ்துளை கிணறு என 24 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் தினசரி 14 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனை தடுப்பதற்காக ரூ. 3.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 30 கிலோமீட்டர் தூரத்திற்கு, 229 மின் கம்பங்கள் மற்றும் 13 மின் மாற்றிகள் மூலம் தனி மின்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 23 மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டிகளுக்கு 24 மணி நேரமும் 11 கேவி திறன் கொண்ட மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

வருவாய்த்துறை அமைச்சர்

சேத்தூர் துணை மின் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மும்முனை மின்சாரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்திக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு? “விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது. இதை நிதியமைச்சர் தங்கம் தென்னரசும் உறுதி செய்து உள்ளார்” என தெரிவித்தார்.

விருதுநகர்: `ஊதிய உயர்வு; பணிச்சுமை'- அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைப் புறக்கணிப்பு

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி 2000 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் மருத்துவமனையில் 1200 படுக்கையுடன் செயல்படும் உள் நோயாளிகள் பிரிவில் ஆயிரம் பேர் சிகிச... மேலும் பார்க்க

"டிராகன் - யானை சேர்ந்து நடந்தால் உலகில் வலிமை உண்டாகும்" - சீனா, இந்தியா உறவு குறித்து சீன அதிபர்

எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) சீனா, ஈரான், இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான்... மேலும் பார்க்க

எம்.எல்.ஏ-வுக்கான ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ள ஜக்தீப் தன்கர்; விவரம் என்ன?

துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர், அவரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும் நிலையில் திடீரென கடந்த ஜூலை 21 அன்று பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவிற்கு அவரின் உடல் நிலையை காரண... மேலும் பார்க்க

`விஜய் குறித்த கேள்வி, DMK vs TVK, புதிய கட்சிகள் வருகிறதா?’ - ஸ்டாலின் சொன்ன பதில்

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். ஒருவாரகால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் முதல்வர் ஸ்டாலினுடன் துர்கா ஸ... மேலும் பார்க்க

தென்காசி: "ரேசன் கார்டில் வனவிலங்குகளைச் சேருங்க" -வனத்துறைக்கு எதிராக விவசாயிகள் மனு; பின்னணி என்ன?

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆகஸ்ட் 29) மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் அனைத்து வட்டார பகுதிகள... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல்நலம்: "மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தேன்" - முதல்வர் ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, 22.08.2025 அன்று வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை தனி... மேலும் பார்க்க