செய்திகள் :

"டிராகன் - யானை சேர்ந்து நடந்தால் உலகில் வலிமை உண்டாகும்" - சீனா, இந்தியா உறவு குறித்து சீன அதிபர்

post image

எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) சீனா, ஈரான், இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், பெலாரஸ், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  2005 முதல் பார்வையாளராக இருந்த இந்தியா, 2017ல் உறுப்பு நாடாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

இந்தியா குறித்துப் பேசியிருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங், "இந்தியாவும், சீனாவும் நட்புநாடுகள். டிராகனும் யானையும் ஒன்றாக வருகின்றன. உலகம் இன்று மிகப்பெரிய மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. உலகின் பழமையான நாகரிகங்களாகவும், மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாகவும் இருக்கும் இந்தியா மற்றும் சீனா இந்த மாற்றத்தின் மையத்தில் நிற்கின்றன.

இரு நாடுகளும் ‘குளோபல் சவுத்’ பகுதிக்கு உட்பட்டவை. சமநிலையான உலக ஒழுங்கை உருவாக்குவதற்கு பொறுப்பையும் இரண்டு நாடுகளும் கொண்டிருக்கின்றன. நம் இரு நாடுகளும் நண்பர்களாகவும், நல்ல அண்டை நாடுகளாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், ‘டிராகன்’ மற்றும் ‘யானை’ இணைந்து நடக்கும் போது, உலகம் ஒற்றுமையையும் வலிமையையும் காணும்." என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

எம்.எல்.ஏ-வுக்கான ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ள ஜக்தீப் தன்கர்; விவரம் என்ன?

துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர், அவரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும் நிலையில் திடீரென கடந்த ஜூலை 21 அன்று பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவிற்கு அவரின் உடல் நிலையை காரண... மேலும் பார்க்க

`விஜய் குறித்த கேள்வி, DMK vs TVK, புதிய கட்சிகள் வருகிறதா?’ - ஸ்டாலின் சொன்ன பதில்

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். ஒருவாரகால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் முதல்வர் ஸ்டாலினுடன் துர்கா ஸ... மேலும் பார்க்க

தென்காசி: "ரேசன் கார்டில் வனவிலங்குகளைச் சேருங்க" -வனத்துறைக்கு எதிராக விவசாயிகள் மனு; பின்னணி என்ன?

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆகஸ்ட் 29) மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் அனைத்து வட்டார பகுதிகள... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல்நலம்: "மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தேன்" - முதல்வர் ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, 22.08.2025 அன்று வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை தனி... மேலும் பார்க்க

`எப்படி இருக்கிறார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு?' - அமைச்சர் மா.சு விளக்கம்

கடந்த 22.08.2025 அன்று வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டு, உடனடியாக அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்... மேலும் பார்க்க

`ஏங்க..' கூமாப்பட்டி பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு!

“ஏஏஏஏஏஏஏஏங்க.... தமிழ்நாட்டிலேயே எங்க ஊரு கூமாபட்டி மாதிரி எங்கேயுமே கிடையாது. ஏன்... ஒலகத்திலேயே கிடையாது. இந்தமாதிரி ஊரு எங்கயாச்சும் உண்டா? ஏங்க... தனி ஐலாண்டுங்க. அங்கப் பாருங்க, காஷ்மீர் மாதிரி இ... மேலும் பார்க்க