செய்திகள் :

ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆசிரியர்கள் ஓய்வுபெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி திபான்கர் தத்தா உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆசிரியர்கள் டெட் எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதுபோல செய்தால், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை பாதிக்குமா? என்று ஆராயவும் உச்ச நீதிமன்றம் சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆசிரியராக பணியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது. சென்னை சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் கவனிப்பாரற்று உலோகப் பெட்டி திங்கள்கிழமை கிடந்தது. உடனே தகவல் கிடைத்ததும், சம்பவ ... மேலும் பார்க்க

விதிமீறல் கட்டடம்: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட மாநகராட்சி ஆணையர்!

சென்னை: விதிமீறல் கட்டடம் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் மன்னிப்புக் கோரினார்.விதிமீறல் கட்டடம் தொடர்பான உத்தரவுகளை பின... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடலாம்: திருமாவளவன்

தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் முறைகேட்டில் ஈடுபடலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பெரம்பலூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:"ஏற்கெனவே பல்வேறு மாநில... மேலும் பார்க்க

உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்! சசிகாந்த்துடன் ராகுல் பேச்சு!

மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்திலை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.தமிழக மாணவா்களுக்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் அருகே காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திங்... மேலும் பார்க்க

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை: 6 பேர் கைது

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூா் அருகே கடம்பத்தூரைச் சோ்ந்தவா் ராஜ்கமல் (28). இவா் கடந்... மேலும் பார்க்க