செய்திகள் :

TMC: FIR பதிவு செய்த காவல்துறை: `மடையர்களுக்கு இதெல்லாம் புரியாது' - எம்.பி மஹுவா மொய்த்ரா காட்டம்

post image

பங்களாதேஷிலிருந்து சட்டவிரோத ஊடுருவல்களை மேற்கு வங்க அரசு அனுமதிப்பதாகவும், அவர்களை வாக்கு வங்கியாக திரிணாமுல் காங்கிரஸ் பார்ப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா, கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ``இந்திய எல்லைகளைப் பாதுகாப்பது உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை அமித் ஷா தட்டிக்கழிக்கக் கூடாது.

எம்.பி மஹுவா மொய்த்ரா
எம்.பி மஹுவா மொய்த்ரா

அவர் தன் பொறுப்பில் தவறி, நூற்றுக்கணக்கானோர் இந்தியாவிற்குள் நுழைவதை அனுமதித்தால், அவர் வெட்கித் தன் தலையை மேசையில் வைக்க வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்தார்.

மஹுவா மொய்த்ராவின் இந்தக் கருத்து ஜனநாயக நிறுவனங்களை அவமதித்ததாகவும், வெறுப்பை விதைப்பதாகவும், தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் வசிக்கும் கோபால் சமந்தோ என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

சொலவடைச் சொல்

அதன் அடிப்படையில் மஹுவா மொய்த்ரா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தன் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, 'அப்கி பார், 400 பார்' (இம்முறை, 400ஐத் தாண்டி) என்ற முழக்கம் அடிபட்டுப் போனது.

'இந்த முடிவு மோடியின் முகத்தில் விழுந்த அறை' என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அப்படியானால் யாராவது பிரதமர் மோடியின் முகத்தில் சென்று அறைந்தார்களா? இல்லை... 'தலைகள் உருளும்' எனக் கூறுகிறார்கள். தலைகள் உருண்டதா?

எம்.பி மஹுவா மொய்த்ரா
எம்.பி மஹுவா மொய்த்ரா

நான் கூறியது ஒரு சொலவடைச் சொல். 'Heads will roll' (தலைகள் உருளும்) என்பது பொறுப்புடைமைக்கான ஒரு சொலவடை. அதேபோல், வங்காள மொழியில், 'லொஜ்ஜாய் மாதா காடா ஜாவா' (Lojjay Matha Kata Jawa) என்றால், நீங்கள் மிகவும் வெட்கப்பட்டு, உங்கள் தலையை நீங்களே வெட்டிக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

அதாவது பொறுப்பேற்பது, கடமையை ஏற்றுக்கொள்வது என்று பொருள்படும். இது ஒரு சொலவடை அவ்வளவுதான். FIR-ல் நான் சொன்ன சொலவடைக்கு வார்த்தைக்கு வார்த்தை பொருள் பார்த்து குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

நீங்கள் வங்காளத்திலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும் மொழிபெயர்க்க கூகுள் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தும் போது போலியான FIR-களைப் பதிவு செய்யத்தான் வேண்டும். மடையர்களுக்கு சொலவடைகள் புரியாது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

TNPSC தேர்வில் அவமதிக்கும் வகையில் கேள்வி; கொதிக்கும் அய்யா வைகுண்டர் பக்தர்கள்; பின்னணி என்ன?

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை அவமதிக்கும் வகையில் கேள்வி கேட்கப்பட்டதாக கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பக்தர்கள் கொதிப்படைந்துள்ளனர்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலைய... மேலும் பார்க்க

'பிரிக்ஸ் நாடுகள் மீதான தடைகளுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் நிற்கும்' - ட்ரம்பிற்கு புதின் பதில்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றத்தில் இருந்து அவரை உறுத்தும் விஷயங்களில் ஒன்று, 'பிரிக்ஸ்'. பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக செயல்படும்... அமெரிக்க டாலருக்கு எதிராக, அவர்களது நாணயத்தை கொண்டு... மேலும் பார்க்க

"சீனியாரிட்டியில் 9வது இடத்தில் இருப்பவருக்கு டிஜிபி பதவியா?" - முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

கோவை பூ மார்கெட் தெப்பக்குளம் மைதானத்தில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர்,“திமுக ஆட்ச... மேலும் பார்க்க

புதுச்சேரி: "ஒரு பெண்ணுக்கு எவ்வளவு டார்ச்சர்?" - அமைச்சர்களுக்கு எதிராக MLA சந்திர பிரியங்கா வீடியோ

`ஒரு பெண்எம்.எல்.ஏஅவர்களின்கன்ட்ரோலுக்குவரவில்லை என்றால், அவர்களுக்கு எந்த எல்லைக்கும் சென்றுடார்ச்சர்கொடுக்கிறார்கள். எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. ஒரு ஆண்எம்.எல்.ஏ-வைஇப்படி எல்லாம்டார்ச்சர்செய்வீர்... மேலும் பார்க்க

மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: மும்பை சாலைகளை வீடாக்கிய போராட்டக்காரர்கள்; நிலவரம் என்ன?

மராத்தா சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி மனோஜ் ஜராங்கே பாட்டீல் கடந்த 3 நாட்களாக மும்பையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.மகாராஷ்டிரா முழுவதும் இருந்து 30 ஆயிரம் மரா... மேலும் பார்க்க