செய்திகள் :

ஜம்முவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா

post image

ஜம்முவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது பிக்ரம் சவுக் அருகே உள்ள தாவி பாலத்தில் நின்று ஆற்றங்கரையோரங்களில் ஏற்பட்ட சேதங்களை அவர் ஆய்வு செய்தார். ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, இன்று பிற்பகலில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அமித் ஷா ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்யலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக வெள்ள நிலைமை மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் ஜம்மு வந்தடைந்தார்.

மூன்று மாதங்களில் உள்துறை அமைச்சர் ஜம்முவுக்கு வருகை தருவது இது இரண்டாவது முறையாகும். ஆகஸ்ட் 14 முதல் கிஷ்த்வார், கதுவா, ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் மேக வெடிப்புகள், நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 130க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மேலும் 33 பேர் காணாமல் போயுள்ளனர். ஆகஸ்ட் 26-27 ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் ஜம்மு மற்றும் பிற சமவெளிகளின் தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் உள்கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 26ஆம் தேதி மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பக்தர்கள் பலியாகினர்.

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு

Union Home Minister Amit Shah on Monday visited the flood-hit areas of Jammu, officials said.

’இந்தியர்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்’ - டிரம்ப் ஆலோசகர் புது குற்றச்சாட்டு!

இந்திய மக்களின் இழப்பில் பிராமணர்கள் லாபம் ஈட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் எட்ட... மேலும் பார்க்க

பெங்களுரூ: காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் பலி !

பெங்களுரூவில் காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்டுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பன்னேர்கட்டாவில் உள்ள ரங்கநாத லேஅவுட்டில் வசித்து வந்தவர் மென்பொறியாளர் ம... மேலும் பார்க்க

ராகுல் அனைத்து மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறார்: அஜய் ராய்!

பிகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய வாக்குத் திருட்டு பிரச்னை மக்களிடையே எதிரொலிப்பதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்தார்... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் இருவர் பலி!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(... மேலும் பார்க்க

தோளோடு தோள் நிற்கும் இந்தியா - ரஷியா! புதினுடனான சந்திப்பில் மோடி பேச்சு!

மிகவும் கடினமான சூழலிலும் இந்தியாவும் ரஷியாவும் தோளோடு தோள் நின்று உதவியுள்ளதாக ரஷிய அதிபருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு... மேலும் பார்க்க

அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை: வானிலை ஆய்வு மையம்

ஏற்கனவே மழை, வெள்ளத்தால் திணறி வரும் வட இந்திய மாநிலங்களுக்கு அடுத்த 24 - 48 மணி நேரங்கள் அபாயகரமானவை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் பார்க்க