BRS: "மிகவும் வேதனையளிக்கிறது" - சஸ்பெண்ட் ஆன ஒரே நாளில் கட்சியிலிருந்து விலகிய ...
RCB stampede: "மிகவும் சந்தோஷமான தருணம் துக்கமானதாக மாறிவிட்டது" - கோலி உருக்கம்
இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஒரு வழியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த சீசனில் கோப்பையை வென்றது.
ஆனால், ஆர்.சி.பி ரசிகர்களுக்கு அந்த சந்தோஷம் முழுதாக ஒருநாள் கூட நீடிக்கவில்லை.
ஜூன் 3-ம் தேதி ஆர்.சி.பி கோப்பை வெல்ல, அவசர அவசரமாக அடுத்த நாளே 32,000 இருக்கைகள் அளவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டம் அறிவிப்பு வெளியானது. இதனால், ஜூன் 4-ம் தேதி எதிர்பாராதவிதமாக ஸ்டேடியத்துக்கு வெளியே லட்சக் கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் சிக்கி உயிரிழந்தனர். ஒரே நாளில் ஆர்.சி.பி-யின் கொண்டாட்டம் துக்கத்தில் மூழ்கியது.
இந்த நிலையில், ஆர்.சி.பி வீரர் விராட் கோலி அந்த சம்பவம் குறித்து, "ஜூன் 4-ம் தேதி போன்ற ஒரு துயரத்திற்கு வாழ்க்கையில் எதுவும் உங்களைத் தயார்படுத்தாது.
நம் அணியின் வரலாற்றில் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்க வேண்டியது, துக்கம் நிறைந்ததாக மாறியது.
“Nothing in life really prepares you for a heartbreak like June 4th. What should’ve been the happiest moment in our franchise’s history… turned into something tragic. I’ve been thinking of and praying for the families of those we lost… and for our fans who were injured. Your… pic.twitter.com/nsJrKDdKWB
— Royal Challengers Bengaluru (@RCBTweets) September 3, 2025
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்த ரசிகர்களுக்காகவும் தினமும் பிரார்த்தனை செய்து வருகிறேன்.
இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகிவிட்டது. அக்கறையுடனும், மரியாதையுடனும், பொறுப்புடனும் ஒன்றாக முன்னேறுவோம்" என்று உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.
கோலியின் இந்த செய்தியை அணி நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.