பூம்புகார் அருகே கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
Mitchell Starc: ``இதுவே சிறந்த வழி'' - சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த மிட்செல் ஸ்டார்க்
மிட்செல் ஸ்டார்க்
சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.
ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் இதுவரை 65 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடைசியாக, கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில், சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

ஓய்வு குறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க்,
"டெஸ்ட் கிரிக்கெட்டிற்குதான் நான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன்.
ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய ஒவ்வொரு T20 போட்டியையும் நான் நேசித்தேன்.
குறிப்பாக, 2021 T20 உலகக் கோப்பை வெற்றியை மறக்க முடியாதது. நாங்கள் கோப்பையை வென்றது மட்டுமல்ல, அந்தத் தொடரின் முழுவதும் ஒரு சிறந்த குழுவாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகப் பயணித்தோம்.
2026-ம் ஆண்டின் பிற்பகுதியில் வங்கதேசத்திற்கு எதிரான உள்நாட்டுத் தொடர், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்கள், 2027-ல் இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இங்கிலாந்துக்கு எதிரான 150-வது ஆண்டுவிழா டெஸ்ட் மற்றும் ஆஷஸ் தொடர் என மிக நீண்ட பயணத்திற்குத் தயாராக வேண்டியிருக்கிறது.

அதேபோல், வரவிருக்கும் இந்திய டெஸ்ட் தொடர், ஆஷஸ் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, என் உடலை கட்டுக்கோப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சிறந்த வழி இதுவே என்று நான் நினைக்கிறேன்.
இதற்குப் பிறகு, 2027-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையையும் ஆஸ்திரேலியா எதிர்கொள்ள உள்ளது.
என்னுடைய இந்த முடிவு அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இளம் பந்துவீச்சாளர்கள் தயாராகுவதற்கும் போதுமான நேரத்தை வழங்கும்," என்று விளக்கமளித்துள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...