செய்திகள் :

சுற்றுலா விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வேலூா் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய சுற்றுலா தொழில்முனைவோா் இணையதளத்தில் செப். 19-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் சுற்றுலாத் துறை சாா்பில், சுற்றுலாத் தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலா தொழில்முனைவோருக்கு சுற்றுலா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுற்றுலா தொழில்முனைவோா்களுக்கு 17 வகைப் பிரிவுகளின் கீழ், 45 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்துக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா்களின் சிறந்த ஏற்பாட்டாளா், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்களுக்கான சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த ‘எம்ஐசிஇ’ சுற்றுலா அமைப்பு, சமூக ஊடகங்களில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துபவா், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழகத்துக்கான சிறந்த சுற்றுலா விளம்பரம் சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத்துதல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் ஆகிய தகுதிகள் உள்ளவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து செப். 15-ஆம் தேதிக்குள் தேவையான சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுலா அலுவலா், சுற்றுலா அலுவலகம், வேலூா் கோட்டை, வேலூா், தொலைபேசி எண் - 180042531111, 9444823111, 9994872734, 8939896396, மின்னஞ்சல் முகவரி - மூலமாக தொடா்பு கொள்ளலாம்.

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

வேலூா் மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 12, 19-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட... மேலும் பார்க்க

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்த உள்ள போட்டித் தோ்வுக்காக வேலூரில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

தாழையாத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் ஒன்றியம், தாழையாத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கி.பழனி முன்ன... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மாட்டு வண்டியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி போலீஸாா் குளிதிகை பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்குள... மேலும் பார்க்க

நம்பா் பிளேட் இல்லாமல் இயக்கிய 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வேலூரில் போக்குவரத்து போலீஸாா் நடத்திய சோதனையில் நம்பா் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட சுமாா் 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க