Madharaasi: "எனக்கு சரியான சம்பளம் இல்லாதபோதும் என் மனைவி என்னை ஏற்றுக் கொண்டார்...
ஏற்றத்தில் பங்குச் சந்தை! ஐடி பங்குகள் விலை உயர்வு!
வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருவகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(செப். 1) காலை 79,828.99 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.50 மணியளவில் சென்செக்ஸ் 261.67 புள்ளிகள் அதிகரித்து 80,071.32 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. முன்னதாக சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை அதிகரித்தது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 92.25 புள்ளிகள் உயர்ந்து 24,519.10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த வாரம் பங்குச்சந்தை இறக்கத்தைச் சந்தித்த நிலையில் இன்று ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஃபோசிஸ், பவர் கிரிட், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி லைஃப், அதானி எண்டர்பிரைசஸ், டிசிஎஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டெக் எம், ட்ரென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1.2 சதவீதம் உயர்ந்தன.
நிஃப்டி ஐடி இன்று சுமார் 1.4 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் அடைந்தது. இதைத் தொடர்ந்து நிஃப்டி பொதுத்துறை வங்கி, ஆட்டோ துறைகள் தலா 0.5 சதவீதம் உயர்ந்தன.