`விவசாயிகளை பாதிக்கும் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காது'- அமைச்சர் கே.கே.எஸ்.எ...
நடிகரின் பாதுகாவலருக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம்! ரூ.100 கோடி சொத்து?
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பாதுகாவலருக்கு சம்பளமாக ரூ.15 லட்சம் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு நீண்டகாலமாகவே அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. ஆகையால், ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் தனிப்பட்ட பாதுகாவலர்களும் எப்போதும் உடனிருப்பர்.
அந்த வகையில், சல்மான் கானின் பாதுகாவலரான ஷேரா என்றழைக்கப்படும் குர்மீத் சிங் என்பவர்தான் பெரிதும் நம்பிக்கை உடையவராகத் திகழ்கிறார். அவர்தான், சல்மான் கான் செல்லும் இடமெல்லாம் நிழல்போல பின்தொடர்கிறார்.
1995-லிருந்து சல்மான் கானுக்கு பாதுகாவலராக இருக்கும் ஷேராவை, சல்மான் கானின் சகோதரரான ஷோஹைல் கான்தான் நியமித்தார்.
சல்மான் கான் எங்கு சென்றாலும், அவருக்கு முன்பாக ஷேரா சென்று, அவரின் பாதுகாப்பை உறுதி செய்கிறார். ஷேரா உடனிருந்தால் மட்டுமே பாதுகாப்பாக உணர்வதாகவும் சல்மான் கான் தெரிவிக்கிறார்.
ஷேராவுக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம் வழங்குவதுடன், அவருக்கு பல்வேறு சலுகைகளையும் சல்மான் கான் அளித்து வருகிறார். அவருக்கு ரூ.100 கோடிக்குமேல் சொத்து மதிப்பும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் ரூ.1.40 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் காரையும் ஷேரா வாங்கியிருந்தார்.
சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஷேரா, தனது பணிக்கு இடையூறாக இருப்பதாக தலைப்பாகை மற்றும் தாடியையும் சல்மான் கானுக்காக அகற்றியதுடன், அவருக்காக உடலில் துப்பாக்கி குண்டை ஏற்கவும் தயார் என்று ஷேரா கூறுகிறார்.
இதையும் படிக்க:இந்தியா மீது 50% வரி! அமெரிக்காவுக்குத்தான் பாதிப்பு?