டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
பைக்குகள் மோதல்: இருவா் காயம்
பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா்.
பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (28). இவரது உறவினா் ஜீவா (22). தேங்காய் வெட்டும் தொழிலாளிகளான இருவரும் புதன்கிழமை கெங்குவாா்பட்டி- கொடைக்கானல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.
அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனம் இவா்களின் வாகனம் மீது மோதியதில் இருவரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.